Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளம்பெண்


கர்நாடகாவின் துமகூரு  மாவட்டம் திப்டூர் நொனவினகெரே ரங்கையனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா  (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தோழி லாவண்யா.  கடந்த 24ம் தேதி லாவண்யா, தோழி திவ்யாவிடம் தனியாக பேசவேண்டுமென்று ஊருக்கு  ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இவர்களின்  வருகையை எதிர்நோக்கி வாலிபர்கள் 2 பேர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.  அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யா இவர்கள் யார் என்று  கேட்டுள்ளார். அதற்கு லாவண்யா, அவர்கள் தனது நண்பர்கள் என்று கூறி அறிமுகம்  செய்துள்ளார். 4 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தபோது, லாவண்யா,  திவ்யாவிற்கு குடிப்பதற்காக குளிர்பானம் ஒன்றை கொடுத்தார். அதை வாங்கி  குடித்த சில நிமிடங்களில் திவ்யா, மயங்கி விழுந்தார்.

மாலையில் நடந்த  இச்சம்பவத்தால் திவ்யா வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.  பெற்றோர் அவரை நண்பர்கள் மற்றும் தோழி வீடுகளில் தேடி பார்த்தனர். நள்ளிரவு  வரை கிடைக்கவில்லை. நேற்று காலை இது தொடர்பாக பெற்றோர், போலீஸ் நிலையத்தில்  புகார் அளிக்க இருந்த நிலையில், ரங்கையனஹள்ளி சாலையோரம், அலங்கோலமான  நிலையில் திவ்யா, மயங்கி கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள்  பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற பெற்றோர் அவரை மீட்டு  அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை  பரிசோதனை செய்ததில், திவ்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது  தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திப்டூர் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரித்ததில்,  லாவண்யா என்ற தோழிதான் தன்னை அழைத்து சென்று இந்த நிலைக்கு  ஆளாக்கியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து லாவண்யாவை அழைத்து போலீசார்  விசாரித்தபோது, அவர்கள், நண்பர்கள் வேண்டுகோள் விடுத்ததால், திவ்யாவிற்கு  மயக்க மாத்திரை கலந்து குளிர்பானம் கொடுத்ததாக தெரிவித்தார். அவரின்  வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார், துரிதமாக நடவடிக்கை எடுத்து, லாவண்யா மற்றும் அவரது நண்பர் ரேணுகேஷ் (23), லோகேஷ் (22) ஆகிய 3  பேரை கைது செய்தனர். 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபர்களை  மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம்  குறித்து திப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.