தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்று, திடீரென்று பாதி வழியில் காணாமல் போன நடிகரும், நாடாளும் மக்கள் கட்சி தலைவருமான கார்த்திக், தனது ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் தெரிவிக்க உள்ளாராம்.
திரை உலகில் மூத்த நடிகரான மறைந்த முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு, அந்த சமுதாயத்தில் ஒரளவு செல்வாக்கு உண்டு. இதை வைத்து 7 ஆண்டுகளுக்கு முன் பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தவர், அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் சரியாக பணியாற்றாமல் அடிக்கடி தலைமறைவானதால் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு நடிகர் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். எப்போதும் 'நாட் ரீச்சபிளி'ல் இருக்கும் நடிகர் கார்த்திக், சட்டசபை தேர்தல் நேரங்களில் திடீரென்று தோன்றி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று பிரஸ் மீட் வைத்து அறிவிப்பார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காணாமல் போய் விடுவார். இதனால், முக்குலத்தோர் சமுதாயத்தில் குழப்பவாதி நடிகர் கார்த்திக் என்று அவரது இமேஜ் டேமேஜ் ஆனது.

இப்படியாக அரசியலில் அவருக்கு இருந்த செல்வாக்கு சரிய தொடங்கியது. இதனால் அ.தி.மு.க. தலைமை நடிகர் கார்த்திக்கை கண்டு கொள்ளவில்லை. இதில் ஆத்திரமடைந்த நடிகர் கார்த்திக், சமீபத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை விமர்சித்தார். இதை தொடர்ந்து, தி.மு.க. தலைமை நடிகர் கார்த்திக்கை தங்கள் பக்கம் இழுக்க வலை வீசியது. சுமார் 15 நாட்களுக்கு முன்பு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க கார்த்திக்குக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பிய நடிகர் கார்த்திக், அண்ணா அறிவாலயம் செல்லும் வழியில் திடீரென்று காணாமல் போனார். இதனால் திட்டமிட்டபடி தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோருடனான சந்திப்பு நடக்கவில்லை. அ.தி.மு.க. தரப்பில் இருந்து நடிகர் கார்த்திக்கை போகும் வழியில் தடுத்து நிறுத்தி, தி.மு.க. பக்கம் சாயவிடாமல் பார்த்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் கார்த்திக் என்ன ஆனார். தேர்தலில் யாருக்கு அவர் ஆதரவு தெரிவிப்பார் என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. மேலும், திடீரென காணாமல் போன நடிகர் கார்த்திக்கை பலரும் தொடர்புகொள்ள முயன்றும், வழக்கம் போல் யாராலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதற்கிடையே, நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக்கை பல முயற்சிகளுக்கு பிறகு நாம் தொடர்பு கொண்டோம். அப்போது, ''அ.தி.மு.க.வா, தி.மு.க.வா, யாருக்கு ஆதரவு அளிப்பது, இல்லையென்றால் தனித்து போட்டியிடலாமா என்று கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து விவாதித்து வருகிறேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்று பாதியில் ஏன் திரும்பிவிட்டேன் போன்ற எல்லா கேள்விகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி, சனிக்கிழமை அன்று சென்னையில் ஒரு மினி சினிமா தியேட்டரில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க இருக்கிறேன். அப்போது உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் விடை அளிக்க தயாராக இருக்கிறேன். அதற்கு முன்பாக நான் எதுவும் சொல்லக்கூடாது..." என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.