Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

மினி ஸ்டோரி! உயர்ந்த பண்பு!


இருள் படர்ந்த அந்த வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.
அந்நேரம் வீட்டின் அறையின் உள்ளே காற்று வேகமாக வீசியது. எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்திடும் முயற்சியில் இறங்கியது காற்று.
அந்நேரத்தில் மெழுகுவர்த்தியானது காற்றை நோக்கி, ""காற்றே! எதற்காக இந்த அறையின் உள்ளே வேகமாக வீசிக் கொண்டிருக்கிறாய்? நீ இப்படி வேகமாக வீசிக்கொண்டிருந்தால் நான் அணைந்து விடுவேன் என்று உனக்குத் தெரியாதா? நான் அணைந்து விட்டால் இந்த அறை முழுக்க இருளாகி விடுமே!'' என்றது.
""அறை இருளாகயிருந்தால் உனக்கென்ன?'' என்று கேட்டது காற்று.
""காற்றே என்ன இப்படிக் கேட்டு விட்டாய். இந்த அறையை இருள் அடைய விடலாமா? இந்த அறையை இருள் அடையவிட்டால் இந்த அறையின் உள்ளே ஏராளமான பூச்சிகள் புகுந்து விடும். எலிகள் நடமாடிடும். அதன் பின்னர் இந்த அறையில் வசிக்கின்ற மனிதர்கள் மிகவும் துன்பப்படுவர். எனவே, நாம் எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்திடக் கூடாது. எல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பதுதான் நம் கடமையாகும். எனவே நாம் எக்காரணம் கொண்டும் மகிழ்ச்சியை மறந்திடவேண்டாம்,'' என்றது மெழுகுவர்த்தி.
""மெழுகுவர்த்தியே நீ உன்னையே உருக்கிக் கொண்டாலும் அறையில் வெளிச்சத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய். உன் உயர்ந்த பண்பைப் பாராட்டுகிறேன். இனி நான் புயலாக மாறாமல் தென்றலாக வீச முயற்சிக்கிறேன்,'' என்றது காற்று.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.