அதிமுக அமைச்சர்களில் 10பேருக்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே சமயம் 17 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
மொத்தம் 227 இடங்களுக்கு பட்டியலை வெளியிட்டுள்ள ஜெயலலிதா இதில் 10 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் இருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது கடந்த காலத்தில் கட்சியளவில் புகார்கள் எழுந்ததால் ஜெயலலிதா இந்த முடிவெடுத்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பல அமைச்சர்களுக்கு, இந்த முறை, வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் முழுவதும் அமைச்சராக இருந்து, ஐவர் அணியில் இடம்பிடித்த பழனியப்பனுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
அதேப்போன்று அமைச்சர் முக்கூர் சுப்ரமணியத்திற்கு சீட் வழங்கப்படவில்லை, சர்ச்சையின் நாயகனாக இருந்த தமிழக வனத்துறை அமைச்சர் ஆனந்தன், விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தரராஜன் மற்றும் அமைச்சர் பூனாட்சி, அப்துல் ரஹீம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதே வேளை, ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளானதாக சொல்லப்பட்ட தமிழக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும், , ஆத்தூரில் நத்தம் இரா. விசுவநாதனும், எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமியும், . ஆயிரம்விளக்கில் பா. வளர்மதியும், மதுரை மேற்கில் செல்லூர் மு. ராஜு, நன்னிலத்தில் ஆர். காமராஜூம், குமாரபாளையத்தில் தங்கமணியும், கடலூரில் சம்பத்தும். தொண்டாமுத்தூரில் வேலுமணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகரில் கோகுல இந்திரா, கரூரில் விஜயபாஸ்கர், பெருந்துறையில் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், ஜோலார்பேட்டையில் வீரமணி, சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்தா அமைச்சர்கள் பட்டியல்:
1).பழனியப்பன்
2) மோகன்
3) சுப்பிரமணியன்
4) சுந்தரராஜன்
5) முக்கூர் சுப்பிரமணியன்
6).சண்முகநாதன்
7).அப்துல் ரஹீம்
8).ஆனந்தன்
9).ஜெயபால்
10) பூனாட்சி

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.