எப்போதும் ஒரே மாதிரி ஸ்மூத்தி செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று மாலை சற்று வித்தியாசமாக மாம்பழத்துடன், தேங்காய் பால் சேர்த்து ஸ்மூத்தி செய்து சுவையுங்கள். இது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இங்கு மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: மாம்பழம் - 1 தேங்காய் பால் - 1/2 கப் குளிர்ந்த பால் - 1/4 கப் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் பாதாம் - 4 உலர் திராட்சை - 4
செய்முறை: முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், சுவையான மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி ரெடி!!!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.