Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2016

கண்களை பராமரியுங்கள்


சந்தோஷம் துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் அழகாக இருந்தால் தானே  பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த  உணவை உட்கொள்ள வேண்டும். 

அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள் முட்டை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.  கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில்  உள்ள பொருட்களை பார்த்துவிட்டு  தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். 

கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை  மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். 

நீண்ட நேரம் கணினி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது  கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம். ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பிறகு ஒரு  துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.