Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

ஜெயலலிதாவைப்போல பிரசார வேனில் லிப்ட் பயன்படுத்துவது யார் தெரியுமா?


ஜெயலலிதாவைப்போல பிரசார வேனில் லிப்ட் பயன்படுத்துவது யார் தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் லிப்ட் பொருத்தப்பட்ட வேனை பயன்படுத்துவது யார் தெரியுமா? தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்தான். இவருக்காக கோவையில் தயாரான அதிநவீன வேன் இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.  காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் இன்னும் தங்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தை துவங்கவில்லை.    இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா தமிழிசை சவுந்திரராஜன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி விட்டார்.


இவருக்காக அதிநவீன வசதிகள் கொண்ட பிரசார வேன், கோவையில் தயாராகி, இன்று சென்னை சென்றது. ஜெயலலிதா, கருணாநிதியின் வாகனங்களை போல அதிநவீன வசதிகள் கொண்ட வாகனமாக தமிழிசையின் வாகனம் தயாராகியுள்ளது.   ஒரு ரோலிங் சேர், படுக்கை, நவீன கழிப்பிடம், குளிர்சாதன வசதி, அதிநவீன சஸ்பென்சன் வசதிகளுடன் இந்த வேன் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறகு, பிரசார வேனில் உள்ள மேடைக்கு லிப்ட் வைத்து அமைக்கப்பட்டது தமிழிசை சவுந்திரராஜன் பிரசார வேனில்தான். வேனின் நடுவே உள்ள மேடையில் நின்ற பின்னர் ஸ்விட்ச்சை போட்டால், லிப்ட் உயர்ந்து, மேற்கூரை வழியாக தோன்றி பேச வசதியாக இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த பிரசார வேனின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை பாரதிய ஜனதா கட்சியினர் மறுக்கின்றனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்கின்றனர் அவர்கள். பிரசார வேன் தயாரானதையடுத்து, அடுத்த ஓரிரு தினங்களில் தமிழிசை சவுந்திரராஜன் பிரசாரத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.