முன்னொரு காலத்தில், சிங்கபுரிக் காட்டில் பெற்றோர்களுடன் ஒரு குட்டிக்கரடி வாழ்ந்து வந்தது. அது அன்பு மிக்கது. எல்லாரிடமும் இனிமையாகப் பழகும் குணமுடையது.
ஒருநாள், காட்டில் விளையாடும்போது, உயரமான மரம் ஒன்றில் தேன் கூடு ஒன்றைக் குட்டிக் கரடி கண்டது. உடனே மிகவும் ஆவலுடன் மரத்தில் ஏறியது.
திடீரென்று ஒரு அலறல் சத்தம் மரத்திலிருந்து கேட்டது. கரடி ஏறி நின்ற மரக்கிளையில் ஒரு பறவைக்கூடு இருந்தது. அதில் ஒரு தாய்ப்பறவையும், நான்கு குஞ்சுகளும் இருந்தன.
கரடி இன்னும் சிறிது மேலே ஏறியிருந்தால், அந்த சின்னஞ்சிறிய கூடு, உருத்தெரியாமல் சிதைந்திருக்கும்.
தாய்க்குருவி நடுங்கியவாறு பேசியது.
""அன்பான கரடி அண்ணா! நீங்கள் மேலே ஏறினால் என் கூடு சிதைந்து விடும். என் குஞ்சுகளும் இறந்து விடும். அதை என்னால் தாங்கவே முடியாது,'' என்று சொல்லி அழுதது.
உடனே கரடி, "அன்பான பறவையே! உனது மகிழ்ச்சியை விட, அந்தத் தேன் எனக்குப் பெரிதல்ல. நீ கவலைப்படாதே; நான் போகிறேன்,'' என்று கூறி, மரத்தை விட்டு இறங்கியது. பறவையும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறியது.
சில நாட்களுக்குப் பின்னர், ஒருநாள் குட்டிக் கரடிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
எந்த மருந்துக்கும் வயிற்று வலி குறையவில்லை.
காட்டில் இருக்கும் ஒரு அபூர்வ மூலிகையால் மட்டுமே, கரடியைக் காப்பாற்றலாம் என்று அந்தக் காட்டின் பிரபலமான மருத்துவராகிய நரியார் கூறிவிட்டார்.
கரடியின் அம்மாவும், அப்பாவும் எல்லா இடமும் தேடியும் அந்த மூலிகை கிடைக்கவில்லை.
பறவைகளின் மரத்தடியில் அமர்ந்த பெற்றோர் கரடிகள், தமது மகனின் நிலையைச் சொல்லிக் கவலைப்பட்டனர். மூலிகை கிடைக்கா விட்டால் என்ன செய்வது என்று வருந்தினர்.
அதைக் கேட்ட பறவை அவர்களுக்கு ஆறுதல் கூறியது.
சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லி எங்கோ பறந்து போனது. சிறிது நேரத்தில் மூலிகையுடன் வந்தது.
அந்த மூலிகையால் வைத்தியம் செய்யப்பட்ட குட்டிக் கரடி உயிர் பிழைத்தது. தன் உயிரைக் காப்பாற்றிய பறவைக்கு குட்டிக் கரடி நன்றி கூறியது.
உடனே பறவை, "கரடி நண்பா, அன்று நீ என்மேல் காட்டிய அன்பினால்தான், நான் இன்று உயிரோடு இருக்கிறேன். அந்த அன்பு தான் உன்னை இன்று காப்பாற்றியது,'' என்று கூறியது.
"நாம் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்ந்தால், இந்த உலகில் கவலைகளே இருக்காது,'' என்று கூறிய குட்டிக் கரடி, அன்பின் உன்னத பெருமையை எண்ணி மகிழ்ந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.