Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட் போலியாக அச்சடித்து மோசடி


பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து, பல லட்சம் மோசடி செய்த நெல்லையை சேர்ந்த 2 பேர் கைதாகினர். திருவனந்தபுரம்் தம்பானூர் எஸ்.எஸ்.கோயில் தெருவில் உள்ள ஒரு லாட்டரி கடைக்கு நேற்று முன்தினம் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம் உள்ள லாட்டரிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு விழுந்ததாக கூறி, ஒரு லாட்டரி டிக்கெட்டை கடைக்காரரிடம் கொடுத்தனர். டிக்கெட்டை பார்த்ததும் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர், தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், நெல்லை வண்ணாரபேட்டையை சேர்ந்த பாலமுருகன்(27), சங்கர்(40) என தெரியவந்தது. இருவரும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பரிசு விழுந்த கேரள அரசு லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.