Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

வில்லிவாக்கம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை


வில்லிவாக்கம் அருகே உயர் நீதிமன்ற வழக்கறிஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வியாசர்பாடி, பி.வி காலனி, 29வது தெருவை சேர்ந்தவர் அழகிரி (35), சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அழகிரி மீது வியாசர்பாடி, கொடுங்கையூர், வில்லிவாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அழகிரி, வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்றார். பின்னர், அங்கிருந்து கொளத்தூர் சென்று அங்குள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு, இரவு 10 மணியளவில், தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.

வில்லிவாக்கம், பாலியம்மன் கோயில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை வழிமறித்த 4 பேர், கண் இமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த அரிவாளால், அழகிரியை சரமாரியாக வெட்டினர். இதில், அழகிரியின் தலை, வயிறு, கை, கால் உள்பட உடல் முழுவதும் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அவர், அலறி துடித்தபடி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். இதை பார்த்ததும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்த அழகிரி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வில்லிவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே அழகிரிக்கும், மற்றொரு தரப்புக்கும் தகராறு நடைபெற்றுள்ளது.  இதில், ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அழகிரியை படுகொலை செய்தனரா, அல்லது தொழில் போட்டி காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.