Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2016

சச்சின் பிறந்தநாளில் கோலி சதம் வீண்!


உலகக் கோப்பையில் எதிரணிகளுக்கு தண்ணி காட்டிய இந்திய அணியின் துணை கேப்டன் கோலி. ஐ.பி.எல் தொடரிலும் தனது தெறி பேட்டிங்கை காட்டி வருகிறார். ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டனான கோலி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தனது முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்தார்.

குஜராத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தனி ஒருவனாக பெங்களூரு அணியின் பேட்டிங்கில் கெத்து காட்டிய கோலி கடைசி ஓவருக்கு முன் 85 ரன்களில் இருந்தார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 15 ரன்கள் குவித்து சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனாலும் பெங்களூரு அணியில் கோலி தவிர மற்ற வீரர்கள் ஜொலிக்காததால் அந்த அணி 180 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் லயன்ஸ் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 வெற்றிகளுடன் குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



சச்சின் பிறந்தநாளில் இந்திய அணியின் அடுத்த சச்சின் என வர்ணிக்கப்படும் கோலி சதமடித்தது மகிழ்ச்சி தான் என்றாலும் அந்த சதம் அவரது அணிக்கு வெற்றியை தேடி தரவில்லை என்பது ஆர்.சி.பி அணியின் வருத்தம். ஆனால் இதே போன்று சச்சின் டெண்டுல்கரும் தனது ஒரே ஒரு ஐ.பி.எல் சதத்தை பூர்த்தி செய்த போது அவரது அணி தோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.