மான்-முயல் இரண்டின் குணங்களைக் கொண்ட மிருகம் இந்த அகோட்டி. அபாயம் என்று உணர்ந்தால் முயலைப் போல துள்ளிக் குதித்து, மான்களைப் போன்ற தன் நீண்ட மெல்லிய கால்களினால் தாவிப் பாய்ந்து ஓடும். அது மட்டுமல்ல, இதன் முதுகில் உள்ள மஞ்சள் நிறம், இப்படி இது தாவி ஓடும்போது, மற்ற அகோட்டி களுக்கு எச்சரிக்கையாக டாலடிக்கும்.
இது கூச்ச சுபாவமுள்ள பிராணி. சின்னகாதுகள், சிவந்த காவி ரோமம், கம்பளி ரோமம் போன்ற இதன் தோலுக்காகவே இது வேட்டையாடப்படுகிறது. அகோட்டி இனத்தில் பதின்மூன்று வகைகள் உள்ளன. மத்திய தென் அமெரிக்காவில் மெக்சிகோவிலிருந்து பெருவரையிலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும் அகோட்டிகள் காணப்படுகின்றன.
கொறித்துத் தின்னும் பிராணி வகையைச் சேர்ந்தது அகோட்டி. இதன் ரோமம் பட்டுப்போல வழ வழப் பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆலிவ், தங்கக் காவி, சிவப்பு இப்படிப் பல்வேறு நிறங்களில் அகோட்டிகள் தென் அமெரிக்காவில் நிறையக் காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த அகோட்டி பதினெட்டிலிருந்து இருபது அங்குல நீளமிருக்கும். அடர்ந்த கானகங்களில் பகல் பொழுதில் மரங்களின் வேர்ப் பகுதியில் உள்ள பொந்து களிலோ அல்லது மரங்களில் உள்ள குடைவான பகுதி களிலோ ஓய்வு கொண்டிருக்கும். இரவில்தான் உணவு வேட்டைக்குக் கிளம்பும்.
இதன் உணவு, இலைகள், வேர்கள், உதிர்ந்துள்ள கொட்டைகள், பழங்கள் ஆகியவையே. இது மாமிச பட்சிணி அல்ல. கொட்டைகளையும், பழங்களையும் அணிலைப் போல் முன்னங்கால்களில் பற்றிக் கொண்டு, கொறித்துத் தின்னும். வேட்டைக்காரர்கள் இதை ஏமாற்றிப் பிடிப்பது சுவாரஸ்யமான விஷயம்.
மரங்களடர்ந்த கிளையை நோக்கி சிறு கற்களை வீசுவர். கல் கீழே விழும் ஓசை கேட்ட அகோட்டி, பழமோ, கொட்டையோ மரத்திலிருந்து விழுந்திருப்பதாகக் கருதி, தன் பதுங்குமிடத்திலிருந்து வெளிப்பட்டு, அதைத் தேட முற்படும். அவ்வளவுதான் போச்சு. வேட்டைக்காரர் களின் பிடியில் அகோட்டி சிக்கிவிடும். இதன் இறைச்சி ரொம்பவும் சுவையானது. இது தாவித் தாவி, வேகமாக ஓடக் கூடியது. இது நன்றாக நீந்தும். ஆனால், நீரில் அமிழ்ந்து மூழ்கிப்போகத் தெரியாது. நாய்கள் இதைத் துரத்தினால், சட்டென்று அருகிலுள்ள நீர்நிலையில் குதித்து, நீந்தித் தப்பி விடும்.
இது சிறு குழுக்களாகவே வாழ்கின்றன. வாழை - கரும்புத் தோட்டங்களைக் கண்டால் படுநாசம் விளைவித்து விடும். நிறைய உணவு கிடைக்கும் போது, அதைத் தன் பதுங்குமிடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இவற்றின் உறுதியான பலம்மிக்க முன்பற்களினால், (உளிப்பற்கள்) முன்னங்கால்களால் பற்றிக் கொண்டுள்ள கொட்டைகளை மிக எளிதாக உடைத்துக் கொறிக்கும்.
பெண் அகோட்டிகள் எல்லாப் பருவத்திலும் நிறைய குட்டிகளைப் போடும். ஒவ்வொரு முறையும் இரண்டிலிருந்து நான்கு குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் மூன்று மாதமே. குட்டிகள், இலை மற்றும் ரோமங்களாலான குழிகளில், தாயிடம் பால் குடித்து வளரும் இவ்வேளையில், ஆண் அகோட்டிகளை, பெண் அகோட்டிகள் கிட்ட நெருங்கவிடாது.
அகோட்டிகளைப் பிடித்து வளர்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளிலும் இவை இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் கானங்களின் தரையில் நிறையத் தாவரங்கள் வளரும். இவற்றைச் சிறிய இன மான்கள் தின்று வாழும். ஆனால், தென் அமெரிக்காவில் மான் இனம் கிடையாது. இதன் இடத்தை, மான்களின் உடல்வாகும், வாழ்க்கை முறையும் கொண்ட அகோட்டிகள் பூர்த்தி செய்கின்றன.
அகோட்டிகளுக்கு, மான்களைப் போன்ற மெல்லிய கால்கள் இருப்பது மட்டுமல்ல... பின்னங்கால்களில் குளம்புகள் போன்ற நகங்கள் இருப்பதும், அகோட்டிகள் தாவிப்பாய்ந்து ஓட வசதியாக உள்ளன. ஆனால், இவற்றின் விரல்கள் தனித்தனியே பிரிந்து இருக்கும். இதன் முன்னங்கால்கள் கொறித்துத் தின்னும் பிராணிகளான ரோடெண்டுகளுடையதைப் போல உணவைப் பற்றிக்கொள்ள வசதியாக உள்ளன.
இவற்றின் வாயில் முன்னால் உள்ள உளிப்பற்கள் வளைந்து முன்பக்கம் எனாமல் பூச்சோடு இருக்கும். இந்த உளிப்பற்களின் பின் பக்கம் டென்டீன் என்ற பொருளால் ஆனது. இது எனாமலை விட மிருதுவானது. அடிக்கடி தேய்ந்து போகும். மேல் பல்லும், கீழ்ப்பல்லும் கொறிக்கும் வேளையில் உராயும். ஆனால், இச்செயலினால் உளிப் பற்களின் நுனி கூராக்கப் படுகிறது. இந்தத் தேய்மானத்தை ஈடுகட்ட சிலவகை ரோடண்டு களுக்கு உளிப்பற்கள் தொடர்ந்து வாரத்துக்கு 2.5 மி.மீ வளர்ந்து கொண்டே இருக்கும். இதுமட்டுமல்லாமல் இவற்றின் கீழ்த் தாடை முன்னும் பின்னும் நகரும்படி இணைப்பு உள்ளது. ஆகவே, கொறித்த உணவை கடைவாய்ப் பற்கள் அரைக்க வசதியாகவும் இருக்கிறது.
அகோட்டி வித்தியாசமான பிராணி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.