கேரளாவின் அங்கமாலியைச் சேர்ந்தவர் பால் பாய்னாத்து (85). ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவருக்கு 74 வயதில் மனைவியும் 54 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இவரது மகன் நோய்வாயப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். பால் பாய்னாத்தின் மனைவி, மகன் தினமும் இரவு முழுவதும் ஏசியில் தூங்குவது வழக்கம். இரவு முழுவதும் ஏசி பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகமாவதாக, பால் பாய்னாத்து மனைவி மற்றும் மகனிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பால் பாய்னாத்தின் மனைவியும் மகனும் வழக்கம்போல் ஏசியை போட்டு தூங்கியுள்ளனர். இரவு ஒரு மணிக்கு எழுந்த பால் பாய்னாத்து, ஏசியை ஆப் செய்யும்படி மனைவி, மகனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் ஏசியை ஆப் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பால் பாய்னாத்து, இரும்பு கம்பியை எடுத்து மனைவி மற்றும் மகனை சரமாரியாக தலையில் அடித்துள்ளார்.
இதில் வயதான அவரது மனைவியும் நோயாளியான அவரது மகனும் பரிதாபமாக இறந்தனர். பின்பு பால் பாய்னாத்து, கத்தாரில் வசித்து வந்த தனது இன்னொரு மகனுக்கு போன் செய்து இத்தகவலை தெரிவித்து தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன், பெற்றோர் வீட்டுக்கு அருகில் வசித்தவர்களுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பால் பாய்னாத்தை மீட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பால் பாய்னாத்தை கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.