Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

கேரளா பருப்பு குழம்பு


தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் சின்ன வெங்காயம் - 5 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவி நெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... துருவிய தேங்காய் - 1/4 கப் பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1/4 டீஸ்பூன் தாளிப்பதற்கு... தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 1

செய்முறை: முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியில் மசித்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து பச்சை வாசனை போனதும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் குழம்புடன் சேர்த்து, அதில் ஊற்றி கிளறினால், கேரளா பருப்பு குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.