மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜெட்லி இருந்த 13 ஆண்டு காலத்தில், பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 5 பேர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தன் மீது அவதூறு பரப்பியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் ஜெட்லி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முதல்வர் கெஜ்ரிவால் உள்பட 5 பேர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவால் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை மே 19ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.