தமிழகத்தில் ஒரு காலத்தில் எவ்வாறு ஆட்சி நடைபெற்றது, தமிழ் மன்னர்கள் எப்படி நீதி பிறழாமல் ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றாக இன்றும் இருப்பது சிலப்பதிகாரமும், கண்ணகி கோவிலும். அதற்காக அப்போதைய ஆட்சி மிக சுபிக்ஷமாக இருந்தது, மக்கள் செழிப்பாக இருந்தார்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால் அப்போது அறம் கோட்பாட்டளவிலாவது இருந்தது. 'ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற கோட்பாடுகளை மன்னர்கள் மதித்தார்கள். அதற்கு தகுந்தாற்போல் வாழ்ந்தார்கள். நீதி தவறியதற்காக தன்னைத் தானே மாய்த்து கொண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கெடுவாய்ப்பாக நீதி, சத்தியம் போன்ற சொற்கள் நிகழ்காலத்தில் கண்ணகி கோவில் போல் சிதலமடைந்து இருக்கிறது.
கண்ணகி கோவில்:
பாண்டிய நெடுஞ்செழிய மன்னன், கோவலன் வழக்கை விசாரிக்காமல் நீதி தவறினான். கோவலனை கொண்டு வருவதற்கு பதில், அரச சேவகர்கள் கொன்று வந்தார்கள். இதனால் கோபமுற்ற கண்ணகி, மன்னின் தவறை இவ்வுலகிற்கு உணர்த்தி, மதுரையை சாம்பலாக்கி, கொற்றவையை வணங்கிவிட்டு மதுரையிலிருந்து வெளியேறி, மேற்கு நோக்கி பதினான்கு நாட்கள் நடந்து, சேரநாட்டு திருச்செங்குன்றம் என்ற மலையை அடைந்து, அங்கிருந்து புஷ்பக விமானத்தில் தேவலோகம் சென்றாள் என்றும், முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சேர மன்னன், அவள் புஷ்பக விமானம் ஏறிய இடத்தில் கோவில் கட்டினான் என்றும் சிலப்பதிகாரம் சொல்கிறது.
அந்த கோவில் உள்ள இடம் தமிழக, கேரள எல்லையில் உள்ளது. எல்லைப் பிரச்னை காரணமாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வருடத்திற்கு ஏறத்தாழ ஐம்பாதாயிரம் தமிழக - கேரள மக்கள், சிதலமடைந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலுக்கு வருகிறார்கள், கண்ணகியை வழிபடுகிறார்கள்.
சிதலமடைந்த கோவிலும், அரசியலும்:
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கண்ணகியை கற்புக்கரசி என்கிறார்கள். முற்போக்காளர்கள் பெண்ணடிமைதனத்தின் சாட்சி என்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி கண்ணகியும், கண்ணகி கோவிலும் நமக்கு இன்னொரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது முடியாட்சியிலும் திகழ்ந்த ஜனநாயகத்தை, எளிய மக்கள் முறையிட தகுந்ததாய் இருந்த அரசபையை, தான் செய்த தவறுக்கு மக்கள் தன்னை தூற்றுவார்களோ என்று அஞ்சிய அரசனை, தவறிழைத்தவன் மன்னனே ஆயினும் அவனுக்கும் சாபம் கொடுக்கும் பெண்ணின் வீரத்தை என நமக்கு பல விஷயத்தை கண்ணகி கதை உணர்த்துகிறது.
கண்ணகி கோவிலுக்கு ஏன் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக கடினமான மலைப்பாதையில் மக்கள் வருகிறார்கள் ? கண்ணகி வழிபாடு எதை உணர்த்துகிறது...? கணவனுக்கு கட்டுப்பட்டு அவன் செய்யும் தவறுகளை பொறுத்து, அவனுடன் இணைந்து இறுதி வரை வாழ்ந்து அவனுக்காக மடிவதையா... இல்லை அரசிற்கு எதிராக அநியாயத்தை எதிர்த்து ஒரு புரட்சிப்பெண்ணாக கிளர்ந்தெழுவதையா?
நிஜத்தில் ஒரு வட்ட செயலாளரைக் கூட பகைத்து கொள்ள விரும்பாத நாம், திரையில் கதாநாயகன் அநியாயத்திற்கு எதிராக பொங்குவதை ரசிப்போம், பறந்து பறந்து அடிப்பதை கைதட்டி, விசிலடித்து போற்றுவோம். அது போலதான் நாம் கண்ணகியையும், கண்ணகி கோயிலையும் பார்க்கிறோம்.
நம்மால் என்றுமே அரசின் தவறை தட்டி கேட்க முடியாது. குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட நாம் சினம் கொண்டு நம் பகுதி வார்டு உறுப்பினரை கேட்க மாட்டோம். ஏன் நமக்கு வீண் வம்பு என்று, நமக்கு நாமே, என்றுமே உதவாத சமாதானங்களை சொல்லிக் கொண்டு, காசு கொடுத்து தண்ணீர் வாங்க பழகிய நமக்கு, இந்த தவறுகளை எல்லாம் தட்டி கேட்கும் திரைநாயகன் யுகபுருஷனாக தெரிகிறான். அவனது உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்கிறோம்.

இதை அப்படியே கண்ணகி வழிபாட்டிற்கும் பொருத்தி பார்த்துக் கொள்ளுங்கள். நம்மால் என்றுமே செய்ய முடியாத ஒரு விஷயத்தை கண்ணகி செய்தாள். மன்னனின் தவறை அவன் முகத்திற்கு நேரே சுட்டிக்காட்டினாள். தனக்கு நிகழ்ந்த அநியாயத்தை உலகிற்கு உணர்த்தினாள். இதை நாம் என்றாவது செய்திருக்கிறோமா ? குட்டக் குட்ட குனிய பழகிவிட்டோம்.
நாம் செய்ய முடியாத ஒன்றை, கண்ணகி செய்தாள். அதனால், அவளை அநீதிகளுக்கு பழிவாங்கும் உக்கிர தேவதையின் வடிவமாக நாம் போற்றுகிறோம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.