Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

அம்மா ஸ்டிக்கர்... அன்புமணி போஸ்டர்! தருமபுரியில் கனிமொழி


அ.தி.முகவில் ஜெயலலிதாவுக்காக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். பா.ம.க.வில் அன்புமணிக்கு போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார்.

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணியை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மக்கள் சந்திக்கவே முடியாத முதலமைச்சராக ஜெயலலிதா இருந்துள்ளார். அவர் நமக்கு இனியும் தேவையா? ஹெலிகாப்டரில் வந்து ஏசி மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்யும் ஹெயலலிதா, வெயிலில் சாகும் மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. இவ்வளவு நாட்களாக நடந்த மதுவிலக்கு போராட்டங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது படிப்படியாக குறைப்பேன் என்கிறார். அவர் சொல்வதை மக்கள் நம்பத்தயாராக இல்லை.

ஆனால், தி.மு.க சொல்வதைத்தான் செய்யும். செய்வதைத்தான் சொல்லும். கருணாநிதி முதலமைச்சராக வந்ததும் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்குத்தான். நாங்கள் கொடுத்த டி.வி இன்னமும் ஓடுகிறது. ஆனால், நீங்கள் கொடுத்த மிக்ஸி  மூலையில் கிடக்கிறது.  அப்புறம் இந்த ஊர்ல எம்.பி ஒருத்தர் இருக்கார்ல. அவர் இதுவரை என்னத்தை செஞ்சிருக்கார்? சென்ற ஆண்டு ஐந்து முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அதுவும் உங்களுக்காக பேசிய மாதிரி தெரியவில்லை. தன்னுடைய தொகுதியையையே முன்னேற்ற முடியாத ஒருவர், தமிழகத்தை முன்னேற்றப்போகிறாராம்.



2013-ம் ஆண்டு பட்ஜெட்டிலேயே மொரப்பூர் ரயில்வே திட்டத்திற்காக  240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வழிவகை செய்தது தி.மு.க. ஆனால், இப்போது அந்த திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என்று ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுகிறார். ஒரு பக்கம் தலைவர் கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் முடக்கிய அ.தி.மு.க அம்மா ஸ்டிக்கர் ஒட்டியது. இன்னொரு பக்கம் தி.மு.க கொண்டுவந்த திட்டத்தை நான்தான் கொண்டுவந்தேன் என்று அன்புமணி போஸ்டர் ஒட்டுகிறார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகவே இயங்கும் இயக்கம் தி.மு.க. மக்களுக்காகவே போராடும் தலைவர், கருணாநிதி. 234 தொகுதிகளுக்கும் சென்று குறைகளை கேட்டவர் அண்ணன் தளபதி. ஆகையால், தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்'' என்று முடித்தார்.

இறுதியாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி “பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. இது மக்களுடைய தேர்தல் அறிக்கை. விவசாயிகளுக்கு தனி பட்ஜட் என்பது நீண்டகாலமாக உள்ள கோரிக்கை. தி.மு.க.வைப்பற்றி வைகோ சொல்லும் புகார் முற்றிலும் பொய்யானது. என்றைக்குமே தி.மு.க சாதி ரீதியான தாக்குதலை முன்னெடுத்தது கிடையாது, அப்படி செய்யவும்  எங்களுக்கு தெரியாது'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.