Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

கனிமொழி கூட்டத்தில் கமகமத்த 'சாப்பாடு'- தேர்தல் அதிகாரிகளின் நேரடி விசிட்டால் பரபரப்பு!


சென்னை, கிழக்கு மாவட்ட  தி.மு.க மகளிரணி கூட்டம் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்  பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில்,  சாப்பாடு போடுவற்கான வேலைகள் தீவிரமடைந்திருந்தன. நேற்று மாலை 4 மணிக்கு கூட்டம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு தலைமையேற்கும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அந்த கட்சியில் உள்ள அமைப்பாளர்கள் பேசிய பின் மைக்கை பிடித்த கனிமொழி, அ.தி.முக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசினார். "அ.தி.மு.க ஆட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அந்த பெண்களின் கண்ணீரை துடைக்கும் வகையில், விரைவில் வெளியாக உள்ள தி.மு.க தேர்தல் அறிக்கை இருக்கும். தி.மு.க   தேர்தல் அறிக்கையை தயாரித்து,  அதனை தலைவரிடம் ஒப்படைக்கும் பணி  இருந்ததால் கூட்டத்திறகு வருவதில் கால தாமதம்  ஏற்பட்டது.



மகளிர்  பயன் அடையக்கூடிய வகையில் தி.மு.க தேர்தல்  அறிக்கையில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதனை படித்துவிட்டு  பிற பெண்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. அதேபோன்று பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரே இயக்கம் தி.மு.கதான். பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்  கலைஞர்.

'செய்வீர்களா... செய்வீர்களா!' என்று மக்களை பார்த்து கேட்டார்  ஜெயலலிதா. செய்வோம் என்று  கூறிய மக்கள்தான் படாதபாடு பட்டுவிட்டனர். ஜெயலலிதா கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர்  எவ்வாறு உள்ளது. அரிசி தனியாக, கல் தனியாக போய் கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க தலைவர் கருணாநிதி கொடுத்த தொலைக்காட்சிபெட்டி தற்போதும் நன்றாக உள்ளது.  ஆனால், அ.தி.மு.க அரசு கடமைக்காக பொருட்களை கொடுத்தனர். அவை எல்லாம் இப்போது பயன் இல்லாமல் போய்விட்டன.



அடுத்தது, டாஸ்மாக்.  குடியால் எத்தனை குடும்பங்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது என்பது ஜெயலலிதாவிற்கு தெரியுமா? டாஸ்மாக்கால்  பாதிக்கப்படாத குடும்பமே இல்லை. டாஸ்மாக் மூடப்படுமா என்று சட்டப்பேரவையில் தளபதி கேட்டார். அதற்கு நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார், "மூட  மாட்டோம்,   அரசு வருமானம் குறைந்து விடும்" என்று. அரசின்  வருமானத்திற்காக  இவர்கள் மதுபானக் கடைகளை மூட மாட்டோம் என்று   சொல்லவில்லை. தங்களது சொந்த நிறுவனமான மிடாசின்  வருமானம் குறைந்து விடும் என்பதால்தான்  கடைகளை மூட மறுக்கின்றனர். பெண்கள் வாழ்வின்  முன்னேற்றத்தை தலைவர்   கருணாநிதி மற்றும் தளபதி ஸ்டாலின் அவர்களால் மட்டுமே தர முடியும். அதனால், நீங்கள் கட்சியின் செயல்பாடுகளை பிற  பெண்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்" என்றார்.



கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த தேர்தல் ஆணைய  அதிகாரிகள், சாப்பாடு தயாராகி இருந்த இடத்திற்கு சென்று   ஏற்பாடுகளை பார்வையிட்டனர். அது குறித்து சேகர் பாபுவையும் அழைத்துக் கேட்டுள்ளனர். புகைப்படங்கள்  எடுத்து கொண்டு தேர்தல் அதிகாரிகள் சென்றனர்.

அங்கிருந்த எழும்பூர் பறக்கும் படை தேர்தல் அதிகாரி  ராஜுவிடம் இதுகுறித்து கேட்டபோது , அவர்களிடம் கேட்டோம். எந்த விளக்கமும் தரவில்லை. அனைத்து ஆவணங்களும் கிடைத்துள்ளது. வழக்குப் பதிவு செய்யப்படும்" என்றார்.

கூட்டத்திற்கு வந்த பெண்களிடம் பேசியபோது, "பிரியாணி போடுவதாக அழைத்து  வந்தார்கள். அதனால் கூட்டத்திற்கு வந்தோம். அண்ணன்தான் ஏற்பாடு செய்தார். ஆனால், சாம்பார் சாதம், தயிர் சாதம்தான் கொடுத்தனர்" என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.