Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

கடி ஜோக்ஸ்


""கோழியிலிருந்து முட்டை வந்ததா...? முட்டையிலிருந்து கோழி வந்ததா?''
""கோழியிலிருந்துதான் முட்டை வரும்''
""எப்படி சொல்றே?''
""சிக்கன் பிரியாணி வாங்கினா அதுல முட்டை இருக்கும். முட்டை பிரியாணி வாங்கினா அதுல கோழி இருக்காதே!''


""பஞ்ச பூதங்கள்னா என்ன தெரியுமா...?...சொல்லட்டுமா?''
""வேணாம்பா..., எனக்கு பூதம்னா ரொம்ப பயம்''


""தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி உனக்குத் தெரிந்ததைச் சொல்லு...!''
""மூணு பேரும் அண்ணன் தம்பிகளா இருப்பாங்களோ சார்?''

* ""கேட்டுச் சாப்பிடு''
""உன்னோட அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ்''
""மத்தவங்களுக்கு இருக்கான்னு கேட்டுச் சாப்பிடுன்னேன்''


""சோமு..., சொல்லு..., தாஜ்மஹால் எங்கே இருக்கு?''
""அது எங்க போகும்...? கட்டின இடத்துலதான் இருக்கப்போவுது''
.

*  ""விளம்பரம்தான் சாப்பாடு போடுது''
""உங்கப்பா விளம்பரக் கம்பெனியிலே வேலை செய்யறாரா?''
""ம்ஹூம்...,டி.வி.சீரியலுக்கு நடுவுல வர்ற விளம்பர "கேப்'லதான் எங்கம்மா சாப்பாடு போடுவாங்க''

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.