Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

'அம்மா பேசுகிறேன், நினைவிருக்கிறதா..!?' ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் வேண்டுகோள்..


மகத்தான சாதனை தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கூறி ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றன. வாக்காளர்களின் வீடுகளுக்கே தொலைக்காட்சிகள் மூலமாகவும், செல்போன்களில் குறுந்தகவல், ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப்’ ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் இளம் வாக்காளர்களை கவர தகவல் தொழில்நுட்பத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசி வருகிறார். அதேபோல தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் வாக்கு சேகரித்து வருகிறார். ‘வாட்ஸ் அப்’ மூலம் அ.தி.மு.க. புதிய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

இதில், தி.மு.க. அரசோடு ஒப்பிட்டு மின்சார உற்பத்தியில் அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை எடுத்துக்கூறி ஜெயலலிதா இரு கரங்களையும் கூப்பி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் 32 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது. அதில், " வணக்கம் உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன். நினைவிருக்கிறதா உங்களுக்கு 15 மணி நேரம் மின்வெட்டு. பள்ளி பிள்ளைகள் படிக்கவும் முடியவில்லை. தொழில்கள் எல்லாம் முடங்கின. துன்பங்கள்தான் பெருகின. அது அந்த காலம். இப்பொழுது தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆகியுள்ளது. எங்கும், எப்பொழுதும் எல்லோருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. இந்த மகத்தான சாதனை தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கே. நன்றி வணக்கம்" என்று ஜெயலலிதா பேசுகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.