Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

கருணாநிதி- ஜெ., ஒரே நபரிடம் முத்திரை தாள் வாங்கியது ஏன்?


அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் இணைத்துள்ள முத்திரைதாள் ஒரே நபரிடம் வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் கருணாநிதியும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும் உறுதி மொழி பத்திரம், முத்திரைதாளில் டைப் அடித்து கையொப்பமிட்டு வழங்கப்படும். இதற்கு முத்திரைத்தாள் எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மயிலாப்பூரில் உள்ள விற்பனைத்தாள் விற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற வெண்டர் ரவூப்பாசா என்பவரிடம் வாங்கியிருக்கின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இந்த முத்திரை தாளை ஜெயலலிதா பெற்றுள்ளார். இதன் பத்திர எண்- 6904. கருணாநிதி ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, அதாவது மார்ச் 24ம் தேதி பெற்றுள்ளார். பத்திர எண்: 6897.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரு நபரிடம் வாங்கியது ஏன் என்பது குறித்து விசாரித்த போது, போயஸ்கார்டன் மற்றும் கோபாலபுரத்திற்கு அருகே மயிலாப்பூர் இருப்பதால் இங்குள்ள முத்திரைதாள் அங்கீகாரம் பெற்ற நபரிடம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி சொல்லும் படியான சிறப்பு தகவல்கள் ஏதுமில்லை எனவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.