Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

'ஜெயலலிதா இஸ் ஏ மர்டரர்' என் மீது கேஸ் போடுங்க... வைகோ ஆவேசம்!


விருதாச்சலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் நான்கு பேர் இறந்ததற்கு ஜெயலலிதாதான் காரணம் என நான் சொல்வேன். என் மீது கேஸ் போடுங்கள் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் வைகோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டி பேசினார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை அறிமுக செய்து பிரசாரம் மேற்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ''அ.தி.மு.க. மீது கொடுக்கப்படும் புகார்கள் மீது தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, சிறுதாவூர் பங்களா கண்டெய்னர் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



சிறுப்பான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால், 2ஜி வழக்கு மற்றும் சொத்துகுவிப்பு வழக்கு பயம் காராணமாக அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இது தொடர்பாக  எதுவும் கேட்பதில்லை.


ஜெயலலிதா ஆட்சி ஒரு இடி அமீன் ஆட்சி. லேடி இடி அமீனா ஜெயலலிதா, இது என்ன ஹிட்லர் சர்க்காரா, லேடி ஹிட்லரா ஜெயலலிதா நான் கேட்கிறேன். அந்த 4 பேர் சாவுக்கு நீங்க தான் காரணம். உங்களை கொலைகாரி என்று நான் சொல்வேன் என் மீது கேஸ் போடுங்க. 'ஜெயலலிதா இஸ் ஏ மர்டரர்', ஷி இஸ் ரெஸ்பான்சிபில் ஃபார் தி டெத் ஆஃப் 4 இன்னொசன்ட் பீப்பிள்" என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.