Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

சர்வாதிகாரி ஜெயலலிதா! - கொதிக்கும் குஷ்பு


மக்களை மதிக்கத் தெரியாத முதலமைச்சர் ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கு 2016 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மேற்கொண்ட வாகன பிரசாரத்த்தின்போது, ''முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தின்போது மக்கள் ஆடு, மாடுகளைப்போல் அடைத்து வைக்கப்பட்டு வதைக்கப்படுகின்றனர்.

ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மக்களை மதிக்க தெரியாதவர் ஜெயலலிதா. அவங்களை பொறுத்தவரைக்கும், அவங்க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எப்படி அடிமைகளாக இருக்கிறார்களோ, அதேபோல் தமிழ்நாட்டில் ஓட்டு போடும் மக்களும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சர்வாதிகாரி.

இந்த சர்வாதிகாரி ஆட்சி மாறவேண்டும். மாத்துவோம். உங்களால் முடியும். மக்களை மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கு 2016 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்" என்றார் ஆவேசமாக.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.