ஹாலிவுட் சினிமா பாணியில் வாகனங்கள் தயார் செய்து எதிரணியினரை அழிக்கும் புதிய திட்டத்தை ஐ.எஸ். அமைப்பினர் செயல்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் குர்து படைகளுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்திய தற்கொலை வெடிகுண்டு வாகனம் ஒன்று ஹாலிவுட் படத்தில் வருவது போன்று அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த வாகனத்தை செலுத்தும் சாரதிக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாத வகையில் அமைத்துள்ளனர். குர்து படையினருக்கு எதிராக செலுத்தப்பட்ட இந்த வாகனம் அவர்களை நோக்கி விரைந்து வந்துள்ளது. அதி வேகமாக விரைந்து வரும் ஐ.எஸ். தற்கொலைப்படை வாகனத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் குர்து படையினர் தொடர் தாக்குதலை நிகழ்த்தி வந்துள்ளனர்.
கடுமையான தாக்குதலை குர்து படையினர் நடத்திய பின்னரும் அந்த வாகனம் குர்து படையினரை நோக்கி வந்த வண்ணம் இருந்துள்ளது. முடிவில் குர்து படையினர் அனுப்பிய ஏவுகணையால் அந்த வாகனம் தீப்பிழம்பாக மாறி சிதைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல குர்து படையினரின் உயிர் காக்கப்பட்டது. வாகனத்தை ஏவுகணை சிதைத்து தள்ளியதை அங்கிருந்த குர்து படையினர் குரல் எழுப்பி கொண்டாடியுள்ளனர்.
ஈராக்கின் பல்லூஜா பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் புதுவகையானது என ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். போராட்டத்தின் உக்கிரம் காரணமாக ஐ.எஸ். அமைப்புகளும், குர்து படையினரும் பெரும்பாலும் கெரில்லா பாணி யுத்த முறையை இங்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக ஐ.எஸ் அமைப்பினர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை கூட்டநெரிசலில் அல்லது மக்கள் கவனம் செலுத்தாத வகையில் வெடிக்கச் செய்து அதிக சேதாரத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் தற்போது மாட் மாக்ஸ் ஹாலிவுட் சினிமா பாணியில் வாகனம் வடிவமைத்து தாக்குதலை நடத்துகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.