சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்கு முழக்கம் பிரதானமாக இருந்தாலும், அதுகுறித்து கிளம்பும் விதம்விதமான தகவல்களால் கலவரப்படுகிறார்கள் வாக்காளர்கள். தஞ்சை தேர்தல் பிரசாரத்தில் பேசிய கருணாநிதி, 'தி.மு.கவினருக்கு சொந்தமாக மதுபான ஆலைகள் கிடையாது' என அதிர வைத்தார்.
தஞ்சாவூர், திலகர் திடலில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.
" ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்கிறார். அது என்ன படிப்படியாக என்று புரியவில்லை. மதுக்கடைகளைத் திறந்து வைத்தது கருணாநிதிதானே என்று பேசும் ஜெயலலிதாக்கள் உள்ளனர். 1971-ம் ஆண்டு மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டு தமிழ்நாட்டு கஜானாவுக்கு வருமானம் செலுத்தப்பட்டது. மீண்டும் இரண்டு ஆண்டுகளிலேயே மதுக்கடைகளை மூடிய பெருமை எனக்குண்டு. அப்படி மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறந்து அரசாங்கமே வியாபாரம் செய்த பெருமை, ஜெயலலிதாவுக்கு உண்டு. இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு சொந்தமான மதுபாலை உண்டு. அதில், விலையுயர்ந்த மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், தி.மு.கவினர் யாருக்கும் மதுபான ஆலைகள் கிடையாது. மதுவியாபாரம் செய்ததும் கிடையாது" என அதிர வைத்தார்.
கருணாநிதியின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், " அவரது பேச்சைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஜெகத்ரட்சகன் எந்தக் கட்சியில் இருக்கிறார்? அவருக்கு மதுபான ஆலைகள் எதுவும் கிடையாதா? செங்கல்பட்டில் கனிமொழிக்கு ஒரு மதுபான ஆலை இருக்கிறது. கனிமொழி எந்தக் கட்சியில் இருக்கிறார்? டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமாக மதுபான ஆலை இருக்கிறது. அவருக்கும் தி.மு.கவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? கருணாநிதி வம்பை விலைக்கு வாங்குகிறார். மதுவிலக்குக் கொள்கையில் கருணாநிதிக்கு அறவே நம்பிக்கை இல்லை. ஒரு பொறுப்புள்ள தலைவர் தேர்தல் பிரசாரத்தில் பொய் சொல்வதை ஏற்க முடியவில்லை. அவருடைய பேச்சில் எட்டு நிமிடத்தை இந்தப் பொய்யை சொல்வதற்காக பேசியிருக்கிறார் என்றால், இவர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதுதான் உண்மை.
' சாராயக் கடைகளை அரசு மூடிவிட்டால் எங்கள் ஆட்கள் மதுபான ஆலைகளை மூடிவிடுவார்கள்' என்று கனிமொழி பேசியிருக்கிறார். அப்படியானால், கனிமொழி சொல்வதற்கும் கருணாநிதி சொல்வதற்கும் ஏன் இந்த வேறுபாடு? இதையெல்லாம் பொதுமக்கள் சிந்திக்காமல் இல்லை. கனிமொழி தி.மு.கவில்தானே இருக்கிறார்? அம்மா எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளின் நேரத்தை படிப்படியாக குறைப்பதற்கு முன்பு, போதையில் உள்ள மக்களுக்கு சிகிசிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மதுவிலக்கை நாங்கள் அமல்படுத்துவோம். கேரளாவில் மதுவிலக்கை முன்னெடுத்தார் முதல்வர் உம்மன் சாண்டி. அதுவே அவர்களுக்குப் பெரிய வினையாகிப் போனது. கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ' மதுவிலக்கை அமல்படுத்துவதில் எங்கள் முதலுக்கே மோசமாகிவிட்டது. மலையாள மண்ணின் மனோகரமான வாலிபர்கள் தனக்குத்தானே போதை ஊசி போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்' என வேதனைப்பட்டார்.
அதனால்தான், மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி, மதுவுக்கு அடிமையானவர்களை மீட்ட பிறகு, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற முடிவில் அம்மா இருக்கிறார். தமிழக மக்களின் அபிலாஷைகளை தீர்க்கும் வல்லமை அம்மாவுக்கு மட்டுமே உண்டு. கந்துவட்டி ஒழிப்பு, கட்டப்பஞ்சாயத்துக்கு முடிவு கட்டியது, லாட்டரி வேட்டையை ஒழித்தது என அனைத்தையும் செய்த முடித்த அம்மாதான், மதுவிலக்கையும் அமல்படுத்தப் போகிறார்" என்றார் புருவத்தை உயர்த்தியபடி.
' தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன வார்த்தைகளை காதில் வாங்க வேண்டியது இருக்குமோ?' எனப் பதறுகிறார்கள் புதிய வாக்காளர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.