தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்த அடுத்த நிமிடமே, யார் எங்கு போட்டியிடுகிறார்கள்? என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் களேபரங்களை அரங்கேற்ற தொடங்கிவிட்டது. அதிலும், மயிலாப்பூரில் குஷ்பு களமிறங்குகிறார் என்று வெளியான தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் நட்சத்திர அந்தஸ்துள்ள தொகுதியாக மயிலாப்பூர் பார்க்கப்படுகிறது. கடந்த 2006 தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எஸ்.வி.சேகர். கடந்த தேர்தலில் அ.தி.மு.கவின் ராஜலட்சுமி வெற்றி பெற்றார். அ.தி.மு.கவும் தி.மு.கவும் சமபலத்தில் உள்ள தொகுதியாக மயிலாப்பூர் உள்ளது. 2001-ம் ஆண்டு மட்டும் பா.ஜ.கவின் கே.என்.லட்சுமணன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தமுறை மயிலாப்பூர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் டி.ஜி.பி நட்ராஜை களமிறக்கியிருக்கிறார் ஜெயலலிதா.
படித்த, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் இருக்கும் இந்தத் தொகுதியில், நட்ராஜின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக. அ.தி.மு.க தலைமை நம்புகிறது. இந்தத் தொகுதியில் 1971-ம் ஆண்டு, ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு டி.என்.அனந்த நாயகி வெற்றி பெற்றார். அதன்பிறகு, காங்கிரஸ் வசம் இந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதியை மீட்க வேண்டிய சூழல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்து மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்புவை களமிறக்க, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. நட்சத்திர அந்தஸ்துள்ள குஷ்பு களத்தில் நின்றால், எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது.
இந்தத் தகவல் உண்மையா என்பதை அறிய குஷ்புவிடம் பேசினோம்.
" நிச்சயமாக நான் போட்டியிடப் போவதில்லை. மயிலாப்பூரில் மட்டுமல்ல. வேறெந்த தொகுதியிலும் நான் போட்டியிடப் போவதில்லை. இதுபற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. மாநிலத் தலைமையிடம், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என நான் மனுவே கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி நான் போட்டியிட முடியும்?" என்றார் தெளிவாக.
'குஷ்புவின் நோக்கம் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் மட்டும்தான். சட்டமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரம் மட்டுமே செய்வார்' என்கின்றனர் சத்திய மூர்த்திபவன் வட்டாரத்தில். இதனால், 'அடுத்து யாரை வேட்பாளராக்கலாம்' என தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.