விஜயகாந்தும், தே.மு.தி.க.வும் அண்ணியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறுகின்றனர். நானே என் அன்பு கணவர் விஜயகாந்த் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறேன். நான் அவர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது, கட்சி எப்படி என் கட்டுப்பாட்டுக்குள் வரும்? என்று விளக்கம் அளித்துள்ளார்.
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் நேற்று நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டதில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ''ஜெயலலிதாவிடம் பல ஆயிரம் கோடியை நானும், விஜயகாந்தும் வாங்கிக் கொண்டு, மக்கள் நல கூட்டணியில் இணைந்து விட்டதாக வாய் கூசாமல் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். நாங்கள் பணத்திற்கு அடிபணிய மாட்டோம். எங்கள் கூட்டணி தலைவர்கள் அனைவரும் கறை படியாதவர்கள். தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினரை கறைபடியாதவர்கள் என்று கூறமுடியுமா?.

விஜயகாந்தும், தே.மு.தி.க.வும் அண்ணியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறுகின்றனர். அப்படி சொன்ன சந்திரகுமார், 10 நாட்களுக்கு முன்பு வரை என்னோடு பல கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். என்னை ‘அண்ணி... அண்ணி...’ என்று அழைத்தார். ஆனால், மனதில் வஞ்சனையை வைத்துக் கொண்டு அவர்களால் எப்படி பழக முடிந்தது? நானே என் அன்பு கணவர் விஜயகாந்த் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறேன். நான் அவர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது, கட்சி எப்படி என் கட்டுப்பாட்டுக்குள் வரும்?.

எங்களுடைய இரு மகன்களை போலத்தான், தே.மு.தி.க. தொண்டர்கள் அனைவரையும் நாங்கள் பிள்ளைகளாக பார்க்கிறோம். எங்கள் மனம் அப்பழுக்கற்றது. என் மனதை அவர்கள் புண்படுத்திவிட்டனர். தே.மு.தி.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யூதாஸ் போன்றவர்கள். அதனால், அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கூறிக்கொள்கிறேன்.

டாஸ்மாக் கடைகளை அகற்ற முடியாது என்று அதிமுக அமைச்சர் கூறினார். தற்போது முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர்கள் கூட சந்திக்க முடியாத முதல்வர் ஜெயலலிதா எப்படி அமல்படுத்துவார். லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதனால், இந்த 6 தலைவர்களின் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
விஜயகாந்த் பேச்சு...
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ''சட்டப் பேரவையில் மதுவிலக்கைக் கொண்டு வரமுடியாது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். ஆனால், இப்போது என்ன ஆனது? டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார். இந்தக் கோரிக்கையை தான், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் வலியுறுத்தினர். மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தியே காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரையே விட்டார்.
இதுபற்றி சட்டசபையில் அப்போதே நான் பேசியிருப்பேன். அடி என்றால் அடி தான். நான் எதற்கும் பயப்படமாட்டேன். ஆனால், எனக்கு நீங்கள் கொடுத்த எம்.எல்.ஏ. பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன். சட்டப் பேரவையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர், எதிர்க் கட்சித் தலைவருக்கான காரை நான் பயன்படுத்தவில்லை. அந்தக் காரை ஒப்படைத்துவிட்டேன். இதன்பின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்தார்கள். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எதிரி, அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. ஆனால், இரண்டு பேருக்கும் எதிரி விஜயகாந்த். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அவரே எதிரி. அவரது எண்ணங்களே அவருக்கு எதிராக அமைந்துள்ளன. பத்திரிகையாளர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் கிடையாது. அனைவரும் இங்கே கூடியிருப்பது நல்ல ஆட்சிக்காகத்தான். இதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். நல்லவர்கள் லட்சியம்-வெல்வது நிச்சயம். இந்த பொதுக் கூட்டத்துக்காக காவல் துறை பாதுகாப்பே அளிக்கவில்லை.
மக்கள் நலக் கூட்டணி நல்ல கூட்டணி. காசுக்காக இங்கு யாரும் கூட்டணி சேரவில்லை. இந்தக் கூட்டணிக்காக ரூ.1,500 கோடி வாங்கியதாகக் கூறுகிறார்கள். பணம் வாங்கிய ஆள் மாதிரியாகவா நான் இருக்கிறேன்? அதனால், மக்கள் நலக் கூட்டணி ஜெயிப்பது உறுதி" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.