தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின்னர் இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று கையொப்பமிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி சென்னையில் சந்தித்து தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தனர்.

அதன் பின்னர் கடந்த மாதம் 25-ம் தேதி கருணாநிதியை மீண்டும் சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் குலாம்நபி ஆசாத். அதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் கடந்த 30-ம் தேதி டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது ராகுல்காந்தி, ‘தி.மு.க. கூட்டணியில் 40 தொகுதிகளுக்கு மேல் பெற வேண்டும்’ என்று அவர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. மேலும், இதுகுறித்து குலாம்நபி ஆசாத், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யை கடந்த 31-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இறுதியாக 41 தொகுதிகள் தருவதாக தி.மு.க. தரப்பில் குலாம்நபி ஆசாத்திடம் கூறியதாகவும், அந்த தகவலை குலாம்நபி ஆசாத் ராகுல்காந்தியிடம் தெரிவிக்க அதற்கு, அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததை தொடர்ந்து குலாம்நபி ஆசாத், இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணி ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இரு மாதங்களாக நீடித்து வந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குழப்பம் இன்று ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறும்போது, ''தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்" என்றார் உறுதியாக.
இதேபோல் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தி.மு.க. தலைவர் கருணாந்தி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில், தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுக்கள் இன்று மாலை முதல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும். அதன் பின்னர் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்" என்றார்.
தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து இதுவரை 54 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 41, மனித நேய மக்கள் கட்சிக்கு 5, இந்திய யூனிய முஸ்லிம் லீக் 5, மற்ற கட்சிகளுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 180 தொகுதிகள் தற்போது தி.மு.க. வசம் உள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.