கிரேக்க நாட்டில் டெமத்தனிசு என்ற அறிஞர் இருந்தார். முதியவரான அவரிடம் நிறைய மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.
எந்த வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும், அங்கே செல்வார் அவர். அழுது புலம்புகிற வர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லுவார்.
""ஏன் அழுகிறீர்கள்? இந்த உலகில் நிலையாக வாழ்ந் தவர் யாராவது இருக்கிறார்களா? என்றேனும் ஒருநாள் உடலை விட்டு உயிர் பிரிந்தாக வேண்டும். உயிருக்குக் கிடைக் கும் விடுதலை இது. அழாதீர்கள்,'' என்று ஆறுதல் சொல்வார்.
இதைப் பார்த்த மாணவர்கள், "எங்கள் ஆசிரியர் தெளிவான சிந்தனை உடையவர். சாவைப் பற்றிக் கவலைப் படாதவர்' என்று பெருமையாக நினைத்தனர்.
அவர் எதற்கும் கலங்காதவர் என்று மக்களும் நினைத்தனர்.
திடீரென்று அவரது ஒரே மகன் இறந்து விட்டான்.
மகனின் உடலைக் கட்டிப் பிடித்தபடி அவர், ""ஐயோ... மகனே! என்னை விட்டுப் போய் விட்டாயே... நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்? நானும் உன்னுடன் வருகிறேன்,'' என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
இதைப் பார்த்த மாணவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
"ஆசிரியரே அழுது புலம்புகிறாரே. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது' என்று தயங்கினர்.
அவர்களில் ஒருவன், ""ஐயா! எல்லாருக்கும் ஆறுதல் சொல்லும் நீங்களே இப்படிக் கலங்கலாமா?'' என்று கேட்டான்.
""இறந்து போன என் மகன் இனி வரப் போவது இல்லை. உடலை விட்டு உயிர் நீங்குவது, உயிருக்குக் கிடைக்கும் விடுதலை. என் அறிவிற்கு இவை நன்றாகப் புரிகின்றன.
""அருமை மகனின் திருமுகத்தை இனி நான் பார்க்கப் போவது இல்லை. அப்பா என்று அழைக்கும் இனிய குரலைக் கேட்கப் போவது இல்லை. இதை நினைத்தால், என்னால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. என்ன செய்வேன்? மற்றவர்கள் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறேன். தலைமுடி ஒன்றினால், பெரிய மலையை யாராவது இழுப்பார்களா? அப்படிப்பட்ட அறிவு இல்லாத செயல் செய்துள்ளேன்.
""மகனை இழந்த எனக்கு, அவர்களின் வேதனையும், வலியும் இப்போது நன்றாக புரிகிறது. என்ன செய்வேன்? என்னை அழ விடுங்கள். தடுக்காதீர்கள்,'' என்று கதறினார் டெமத்தனிசு.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.