ஹைதராபாத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த பெண் காவலர்கள், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இந்த அந்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த நான்கு பெண் காவலர்கள், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்ததும் அந்த பெண்ணையும், குழந்தையையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரசவம் பார்த்த காவலர் ஷோபனா கூறுகையில், "அந்த பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. அவள் பெயரை கூற மறுத்துவிட்டாள். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.