Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி


குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் இரண்டு மடங்கு மிகவும் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அதற்காக ஒரு நர்ஸை அழைந்து வந்து பார்த்துக் கொள்வதை விட, தாயானவள் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டால் தான், குழந்தை இன்னும் நன்றாக ஆரோக்கியத்துடன் வளரும். குறை மாதத்தில் குழந்தை பிறந்திருந்தால், அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக பிறத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அப்போது தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தையால் பாலை குடிக்கும் அளவில் திறமை இருக்காது. ஆகவே குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு, மருத்துவரை அணுகியப் பின்னரே பாலை கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் குழந்தையின் எந்த உறுப்புகளும் சரியாக இயங்க முடியாது. எனவே தான் மருத்துவரை அணுகி, எப்போது கொடுக்கலாம் என்று தெரிந்து கொண்டு கொடுக்க வேண்டும்.

குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது ஒரு சிறந்த வழி. ஏனெனில் இதனால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, சருமத்தின் நிலை மற்றும் செரிமான மண்டலம் நன்கு நடைபெறும். மேலும் குழந்தையின் உடல் நன்கு வலுவோடு, ஆரோக்கியத்துடன் இருக்கும்.

குறைமாத குழந்தைக்கு படுக்கும் நிலை என்பது மிகவும் முக்கியமானது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தில், இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சில சமயங்களில் குழந்தையின் படுக்கும் நிலை சரியாக இல்லாத காரணத்தினாலும், குழந்தை இறக்க நேரிடும். ஆகவே குழந்தையை சரியாக படுக்க வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த மாதிரியான குழந்தையின் உடலில் சரியான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே இந்த குழந்தையை எளிதில் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே சரியான சுத்தமான பராமரிப்பு அவசியம்.

குழந்தை குறைமாதத்தில் பிறந்தால், தொடர்ச்சியாக மருத்துவரிடம் சென்று சோதிக்க வேண்டும். இதனால் குழந்தையை ஏதாவது நோய் தாக்கியிருந்தாலும், அதை உடனே வளர விடாமல் தடுக்கலாம்.

மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, குறை பிரவசத்தில் குழந்தை பிறந்தால், மிகவும் கவனமாக பராமரிக்கவும். இதனால் குழந்தை விரைவில் நன்கு வலுவோடு வளர்ந்து, ஆரோக்கியத்துடன் இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.