Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும் உணவு முறை


நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும் உணவு முறை.

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட விரும்பினால் காலையில் வயிற்றை நிரப்புவதை விட்டு விடுங்கள். குறைந்த அளவில் முறையான இடைவெளியுடன் ஐந்து அல்லது ஆறு தடவை சாப்பிடும் முறையானது, உடலுக்குத் தேவையான ஊட்டத்தை சரியான முறையில் பராமரிக்கும்.

குறுகிய இடைவெளியில் குறைவான அளவில் சாப்பிட்டு வருவது இரத்தத்தில் சக்கரையின் அளவு கூடுவதையும், அதனால் ஏற்படும் உடற் சோர்வையும் தடுவதையும் தடுக்கின்றது.

1.காலையில் நாம் மதியம் சாப்பிடும் வரை தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வயிற்றை நிரப்புவது ஆரோக்கியமல்ல. காலையில் எழுந்து 45 நிமிடங்களுக்குள் ஊட்டம் நிறைந்த இலேசான சிற்றண்டி உட்கொள்ளவும்.

நீண்ட தூக்கத்திற்குப் பின் காலையில் எழும்போது வயிறு வெறுமனாக இருப்பது இயற்கையே. அதை அடக்குவதற்காக ஏதாவது சிற்றுண்டியை அறைகுறையாக சாப்பிட்டு விட்டு வேலைக்குப் பறப்பது பலரது பழக்கம். ஆனால் காலையில் தான் நமது உடலுக்கு ஊட்டம் தரும் உணவு தேவை. அதலால் சிற்றண்டியுடன் அவ்வப்போது முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை சோர்விலிருந்து பாதுகாக்கும். வேக வைத்த மிதமான சிற்றண்டிகளை மட்டும் சாப்பிடுங்கள். பொறித்தவைகள் வேண்டாம்.

2.முன் பகலில் ஏதாவது பழங்கள் மற்றும் தயிர் சாப்பிடவும். இது சக்தியை தூண்டும். உற்சாகம் அதிகரிக்கும். பழங்களில் உள்ள இயற்கையான சக்கரையால் அவ்வளவு அதிகம் கெடுதல் இல்லை.

3.மதியம் கோதுமை, கேள்வரகு போன்றவைகளால் தயாரான உணவு வகைகளை உண்ணவும். கார்போ ஹைட்ரேட் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ள உணவு வகைகளால் சோம்பல் ஏற்படாது. இவைகளால் வயிறு நிறைந்து விடுவதால் நொறுக்குத்தீனியை விட்டு விடுவீர்கள்.

4.பிற்பகலில் 30 அல்லது 90 கிராம் அளவு கடலை, பயிறு, வித்து வகைகள் சாப்பிடவும் இதில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அவை உடல் பருமனை ஏற்படுத்து வதில்லை. இவைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

5.மாலையில் சிறிது கைக்குத்தல் அரிசி சாதம், வேக வைத்த மீன் மற்றும் காய்கறிகள் சாப்பிடவும். பிறகு இரவில் எதுவும் சாப்பிடக்கூடாது. இது ஜீரணம் மற்றும் தூக்கத்திற்கு உகந்தது.

6.இரவில் விழித்திருக்க வேண்டியதிருந்தால் ஏதேனும் உகந்த உணவு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நாள் முழுவதும் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் அவசியம் சிறிதளவு தண்ணீர் அருந்துங்கள். அவ்வப்போதும் குடி தண்ணீர் அருந்துங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 லிட்டர் குடி தண்ணீர் அருந்துவது உடலில் சக்கியின் அளவு குறையாமல்  பாது காக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.