தமிழகத்தில் நேர்மையின் அடையாளம் சகாயம் ஐ.ஏ.எஸ் லஞ்சத்துக்கு வில்லனாக களமாடுவதால் இளைஞர்களின் ஹீரோவாக வலம் வருபவர். ஆளாளுக்கு என்னை முதலமைச்சராக்குங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்க, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்று இளைஞர்களாக அணிதிரண்டு பேரணி நடத்துமளவிற்கு வளர்ந்து நிற்கும் நம்பிக்கை மனிதர். அவரின் முகமாக நாமக்கலில் நேற்று விதைக்கப்பட்டிருக்கிறது “நம்பிக்கை இல்லம்”.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஆதரவற்ற குழந்தைகளுக்கென ஒரு இல்லம் தொடங்க வேண்டும் என்று தனக்கு உதித்த எண்ணத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியோடு செயல்படுத்திக்காட்டியிருக்கிறார் சகாயம். நாமக்கலை அடுத்து உள்ள லத்துவாடி கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் நம்பிக்கை இல்லத்தை திறந்து வைக்க திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி வந்திருந்தார்.
தியாகிகள் டாக்டர்கள், மருத்துவர்கள்,தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள் என பாராபட்சம் இல்லாமல் கூடியிருந்த கூட்டத்தின் நெகிழ்ச்சியோடு திறக்கப்பட்டது “நம்பிக்கை இல்லம்”. ஒரு மாணவன் சிலம்பம் ஆடியதற்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறார்கள். அந்த சிறுவன் பணத்தை வாங்கியதும் இல்லத்திற்கே நன்கொடை அளிக்கிறான். பள்ளி மாணவர்கள் ஓடிவந்து ஐந்து ரூபாய் பத்துரூபாய் கொடுத்து என் பங்குக்கு என்று ஆர்வம் செலுத்துவது என கூட்டம் முழுக்க நம்பிக்கை விதைகள்.
கூட்டத்தில் பேசிய அத்துனைபேரும் தமிழகத்தை வழிநடத்த நீங்கள் வர வேண்டும் என சகாயத்திற்கு கோரிக்கை வைத்தே பேசினார்கள். அதில், பேசிய ஒரு தியாகி ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் தொடங்க முன்வந்த நீங்கள். ஆதரவற்று நிற்கும் தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று பேச கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.

அடுத்ததாக மைக் பிடித்தார் சமுத்திரக்கனி “ ரொம்ப மகிழ்ச்சியான தருணம். நம்பிக்கையோட பலமே முழுசா நம்புறதுதான்னு சொல்லுவாங்க. முள்ல புடிச்சாலும் முழுசா புடினு சொல்லுவாங்க அததான் என் அண்ணன்கிட்ட(சகாயம்) நான் பாத்தது. சென்னை வெள்ளத்தின் போது பார்த்தேன். அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்ய முடியாததை ஒரு இளைஞர் சக்தி எழுந்து செய்தது. அதே மாதிரி இங்க நிறைய இளைஞர்களை பார்க்கிறேன். எல்லாருமே இருக்காங்க அவுங்களுக்கு வழிகாட்டுறதுக்குத்தான் யாருமே இல்ல (என்று சொல்லிவிட்டு சகாயத்தை திரும்பி பார்க்கிறார் சாகாயம் மெல்லிய சிரிப்பை உதிர்க்க தொடர்கிறார்...)
செய்யுறதுக்கு தயாரா இருக்காங்க,உழைக்கிறதுக்கு தயாரா இருக்காங்க, கொடுக்கறதுக்கு தயாரா இருக்காங்க, ஆனால், அது எங்க போய் சேரும் சரியான இடத்துக்கு போய் சேருமாங்கிற பயத்துலதான் எல்லாரும் ஒதுங்கி.. ஒதுங்கி.. நிக்கிறாங்க. அதனாலதான் உதவாதவங்க கத்துற சத்தம் பெருசா கேக்குது. சந்தோஷமா இருக்குது. இல்லாதவங்கள இருக்குறவங்க கைப்புடிச்சி இழுத்துட்டு ஓடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் தேசத்துல மட்டும்தாண்டா ஒருத்தன் தடுமாறி விழுந்தா தாங்கிப்பிடிக்கிறதுக்கு ஒரு கை இருக்கு அது உலகத்தில எந்த தேசத்துலயும் கிடையாது.
வெள்ளைக்காரனை பார்த்து காந்தி சொன்னார். அதைத்தான் நான் இங்கே பார்க்கிறேன். ரொம்ப மன நிறைவோடு நிற்கிறேன். ஏன்னா ரத்தமும் சதையுமான ஒரு நிகழ்ச்சி இது. நான் விருது வாங்குனதுக்கு அப்புறம் கலந்துக்குற நெகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இளைஞர்கள் வெகுண்ட சக்தியோடும், மிகுந்த வலிமையோடும் தயாரா இருக்காங்க. ஆனால், எங்க போறது.? என்ன செய்யுறதுன்னுதான் தெரியல எல்லாம் சக்தியையும் அப்டியே அமுக்கி அமுக்கி வச்சிகிட்டே இருக்க குழப்பமான ஒரு சூழல்ல இருக்கு நம்ம தேசம். இது ஒரு சாபக்கேடு எல்லாமே இருக்கு. ஆனால், எதுவுமே இல்ல. எல்லாமே சரியாகும்னு ஒரு நம்பிக்கை இருக்கு விரைவில் அது நடக்கும்.

" முதலமைச்சர் வேட்பாளரை எதிர்த்து களமிறங்குவது சிறுத்தைகளுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். எங்கள் வலிமையை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம். ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் நிறைந்திருக்கக் கூடிய பகுதி அது. வெள்ளத்தால் ஆர்.கே.நகர் பகுதி மக்கள் கொடுமையான துன்பத்தை அனுபவித்தார்கள். அவர்களுக்கு ஆதரவாகக்கூட ஆட்சியாளர்கள் குரல் எழுப்பவில்லை. இர்பான் என்ற பள்ளி மாணவர் வெள்ளத்தின் பாதிப்பால் இறந்துபோனபோது, முதல்முறையாக அந்தக் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி அளித்தார் தோழர்.திருமா. இர்பான் என்ற மாணவரின் மரணத்தை வெளியுலகின் வெளிச்சத்திற்குக் கொண்டு போனது திருமா அவர்கள் மட்டும்தான். எங்களுக்கு அனைத்து வகைகளிலும் சாதகமாக இருக்கக் கூடிய தொகுதி ஆர்.கே.நகர். இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அதிரடியை சிறுத்தைகள் நிகழ்த்துவார்கள்" என்றார் உணர்வுபூர்வமாக.
திருமாவிடம் 'மோதிரக்' கையால் குட்டு வாங்கும் அதிர்ஷ்டம் எந்த வேட்பாளருக்குக் கிடைக்கப் போகிறதோ? என ஆர்வமாக இருக்கிறார்கள் வி.சி.கவினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.