கர்ப்பிணி பெண் போலீஸ் அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அரியானா மாநிலம், பரீதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் வாடகைக்கு வசிப்பவர் மஞ்சீத் சிங். போலீஸ்காரர். இவரது மனைவி பரம்ஜீத் கவுர். கமிஷனர் அலுவலகத்தில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆகியுள்ளன. இந்நிலையில் கடந்த புதன்கிழமை, மஞ்சீத் சிங் பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். வீடு திறந்து கிடந்த நிலையில் மனைவியை காணவில்லை என தேடியுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, குளியலறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. உடனே மஞ்சீத் சிங் வீட்டு உரிமையாளர் பூனத்திடம் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே கவுர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்தை மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து துணை கமிஷனர் கூறும்போது, ‘திருமணமாகி 9 மாதங்களாகிய நிலையில் பரம்ஜீத் கவுர் மர்மமான முறையில் வீட்டில் இறந்துள்ளார். மேலும் அவர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தப்பட்டதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
அதனால் மஞ்சீத் சிங் அவரை கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கவுரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மஞ்சீத் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’. இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.