Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2016

அமெரிக்க டாலரில் அடிமையின் முகம்


அமெரிக்காவின் 20 டாலர் நோட்டில், கறுப்பின மனித உரிமைகள் போராளி ஹாரியட் டப்மேன் அம்மையாரின் படம் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் 20 டாலர் நாணயத் தாளில் முதல் முறையாக ஆப்ரிக்க-அமெரிக்க கறுப்பினெப் பெண்மணி ஒருவரின் படம் இடம்பெறவுள்ளது.

அந்தப் பெருமையை பெற்றுள்ளவர் ஹாரியட் டப்மேன். அவ்வகையில் ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக ஒரு பெண்மணியின் படத்தை டாலர் நோட்டில் அமெரிக்கப் பிரஜைகள் காண்பார்கள்.

அவரது படத்துடன் கூடிய புதிய நாணயத் தாள்கள் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை.

ஹாரியட் டம்பேன் அம்மையார் ஒரு முன்னாள் அடிமை. அவரை அடிமையாக வைத்திருந்தவரும் பின்னர் நாட்டின் அதிபராகவும் இருந்த ஆண்ட்ரூ ஜான்கஸனின் படத்துக்கு பதிலாக இவரது படம் இப்போது 20 டாலர் நோட்டில் இடம்பெறும்.

ஹாரியட் டப்மேன் ஒரு அமெரிக்க கதாநாயகி. முன்னாள் அடிமையாக இருந்த அவர், பலரின் சுதந்திரத்துக்கு வழி வகுத்தவர். பின்னர் பெண் உரிமைப் போராளியானார்.

புதிதாக வரவுள்ள 20 டாலர் நோட்டுகளின் பின்புறம் ஜாக்ஸனின் படம் இருக்கும். முன்புறம் ஹாரியட் அம்மையார்.

ஆனாலும் அவரது படம் நாணயத் தாளில் இடம்பெறுவது குறித்த மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.

கறுப்பின வம்சாவளியினர் இது அமெரிக்க சரித்திரம் மற்றும் தமது வளர்ச்சியில் உள்ள பங்களிப்பை அங்கீகரிக்கும் என்கின்றனர்.

ஆனால் வேறு சிலரோ அவரது பங்களிப்பை போற்றினாலும், மரபுகள் மீறப்படக் கூடாது என வாதிடுகின்றனர்.

எனினும் மரபுவாதிகள் ஒரு விஷயம் குறித்து ஆறுதல் பெறமுடியும்.அமெரிக்க கருவூல அமைப்பை ஏற்படுத்திய அலெக்ஸாண்டர் ஹாமில்டன் படம் மாற்றமின்றி தொடர்ந்து பத்து டாலர் நோட்டில் இடம்பெறும்.

இருந்தபோதிலும் மனித உரிமைப் போராளிகள், அனைவருக்கு வாக்குரிமை வேண்டும் எனப் போராடியவர்கள் சிலரின் படங்கள் ஐந்து மற்றும் பத்து டாலர் நோட்டின் பின்புறம் இடம்பெறவுள்ளன.

புதிய வடிவமைப்புகள் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.