சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1½ டன் புகையிலை–குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புகார்
சென்னையில் பாரிமுனை, அரும்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, மாவா போன்ற போதையூட்டும் பொருட்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக உணவுத்துறை அலுவலகத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் (சென்னை மாவட்டம்) டாக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், ராஜா, ஜெபராஜ், சுந்தரராஜன், சிவசங்கரன், லோகநாதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.
பறிமுதல்
இந்த சோதனையின் போது, சவுகார்பேட்டையில் உள்ள பந்தர் தெரு, வரத முத்தையப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வியாபார நோக்கில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அரும்பாக்கம் பகுதியிலும் ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
மொத்தம் 24 கடைகளில் நடந்த இந்த சோதனையில் 1,600 கிலோ (1.6 டன்) புகையிலை–குட்கா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அழிப்பு
கைப்பற்றப்பட்ட புகையிலை–குட்காவின் மதிப்பு ரூ.4 லட்சத்து 3 ஆயிரம் என்று தெரியவந்துள்ளது. சென்னையில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் உடனடியாக கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.