ஆமதாபாத்;குஜராத்தில், இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் நேற்று நடத்திய போராட்டம், மக்கள் ஆதரவின்றி பிசுபிசுத்தது. குஜராத்தில், பா.ஜ., வைச் சேர்ந்த ஆனந்திபென் படேல் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், பொருளாதார ரீதியாக செல்வாக்கு மிக்க படேல் சமூகத்தினர், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சமூக தலைவர் ஹர்திக் படேல், தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி, படேல் சமூகத்தைச் சேர்ந்த, சர்தார் படேல் குழு தலைவர் லால்ஜி படேல், மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், படேல் சமூகத்தினர் அதிகம் உள்ள ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பாலான நகரங்களில், இப்போராட்டம் பிசுபிசுத்தது. பள்ளி, கல்லுாரிகள் பாதிப்பின்றி இயங்கின; பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தடையின்றி இயங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
படேல் சமூக வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், மெஹ்சானா உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன. நள்ளிரவு வரை, இந்த தடை அமலில் இருக்கும் என, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலை:படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, சூரத் நகரைச் சேர்ந்த, பவின் கன்ட், 27, என்பவர், விஷம் குடித்து தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.