Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

பள்ளிப் பருவத்து காதல்.. 70 வருடங்களுக்கு பின் காதலியை திருமணம் செய்த இங்கிலாந்து ராணுவ வீரர்


இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராய் விக்கர்மேன். தற்போது இவருக்கு 90 வயதாகிறது. இவர் கடந்த 1940-ம் ஆண்டு பள்ளி பருவத்தின் போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார். தற்போது நோரா ஜாக்சனுக்கு 89 வயது.  இருவரும் பள்ளிப் பருவத்தில் தீவிரமாக காதலித்து வந்தனர். 1946-ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனையடுத்து இருவருக்கம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் அறிவிக்கப்பட்டது. எனவே, விக்கர்மேன் போருக்கு சென்று விட்டார்.இரண்டாம் உலகப் போரில் அவர் ராய் விக்கர்மேன் படுகாயம் அடைந்தார். அதற்காக சிகிச்சை பெற்ற அவர் மன உளைச்சலில் சிக்கித் தவித்துள்ளார். எனவே திருமண எண்ணத்தை மறந்து நோரா ஜாக்சனை பிரிந்தார். இதனையடுத்து நோரா ஜாக்சனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின் ஒரு சமயத்தில் நோரா ஜாக்சனின் கணவர் இறந்து விட்டதால் அவர் விதவையாக உள்ளார். இதனிடையே மன அழுத்தத்தில் இருந்து மீண்ட விக்கர்மேன் தனது காதலி நோராவை தொடர்ந்து காதலித்து வந்தார்.

அவரை பல வருடங்களாக தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. திருமண நிச்சயதார்த்தம் நடந்து 70 ஆண்டுகளுக்கம் மேல் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் ஒரு வானொலி நிகழச்சியில் பங்கேற்றார். அப்போது தனது பள்ளிப்பருவத்து காதல் கதையையும், நிச்யதார்த்தம் நடைபெற்ற கதையையும் வானொலி நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். வானொலியில் தங்களது காதல் கதையை கேட்ட நோரா ஜாக்சன் விக்கர்மேனை தொடர்பு கொண்டு சந்தித்தார். சந்த்தின் இறுதியில் இருவரும் தற்போதும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை உணர்ந்துள்ளனர். இதனையடுத்து 70 ஆண்டுகளுக்கு முன் நடைபெறாமல் போன திருமணத்தை தற்போது தங்களுக்கிடையில் நடத்திக் கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.