உறக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் குறிவைத்து தாக்குகிறது. தூக்கமின்மை காரணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். மன அழுத்தம் என்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஒரு பேக்கேஜ் ஆகும். எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்த, நல்ல உறக்கம் பெற இரவில் ஆரோக்கியமானவர்கள் செய்ய தவிர்க்கும் தவறுகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…
உணவு
உறக்கம் வரும் போது இவர்கள் உணவருந்துவதில்லை. மாறாக, உறங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை உட்கொண்டுவிடுகிறார்கள்.
பானங்கள்
இரவு உறங்குவதற்கு முன்னர் அல்லது இரவு நேரத்தில் அதிகப்படியான காபி, ஆல்கஹால், சோடா பானங்கள் பருகுவதை தவிர்க்கிறார்கள். ஏனெனில், இது உறக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள் ஆகும்.
கண்
உறங்குவதற்கு முன்னர் இவர்கள் டிவி பார்ப்பது, மொபைல் நோண்டுவது போன்ற கண்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.
ஒளி
உறங்கும் அறையில் இவர்கள் விளக்கை ஆப் செய்து விடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு மெலடோனின் எனும் ஹார்மோனில் எதிர்மறை தாக்கம் ஏற்படுவதில்லை
நேரம்
இவர்கள் அளவுக்கு அதிகமாக உறங்குவது இல்லை. முக்கியமாக இவர்கள் அலாரத்தை ச்நூஸ் செய்வதில்லை. ஏனெனில் எட்டு மணிநேரத்திற்கு அதிகமான உறக்கம் சோர்வு, இதய நலன் சீர்கேடு, மன அழுத்தம் போன்றவற்றை பரிசளிக்க கூடியவை.
தியானம்
இவர்கள் பெரும்பாலும், காலையில் எழுந்ததும் தியானம் / யோகோ / உடற்பயிற்சி / நடைபயிற்சி என ஏதேனும் ஒன்றையாவது பின்பற்றுகிறார்கள்.
வேலை
மேலும், இந்நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதனால் இவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாவதில்லை.
நீர்
உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடல் பாகங்களில் செயல்திறன் குறைந்து, அசௌகரியம் உணர்வீர்கள். எனவே, சீரான இடைவேளையில் நீர் பருக வேண்டும். நீர்வறட்சியினால் கூட உறக்கம் சீர்கெடலாம்.
65 டிகிரி
நல்ல உறக்கம் வேண்டுமென்றால் உங்கள் அரை சராசரியாக 65 டிகிரியில் தட்பவெப்ப நிலையில் இருக்க வேண்டும் என ஓர் ஆராய்ச்சி தகவலில் கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
முடிந்த வரை கசப்பான நிகழ்வுகளை இதயத்தில் சேமிக்காமல், வெற்றியின் கனத்தை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே நிம்மதி, மகிழ்ச்சி, நல்ல உறக்கம் என அனைத்தும் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.