ராமநாதபுரம் அருகே தொருவளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்க நகைகளை
அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். வங்கியில் மொத்தம் 400 பவுனுக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வங்கி செயலாளர் கஸ்தூரி கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். உதவியாளர் நேற்று விடுமுறையில் இருந்தார். வேறு யாரும் வங்கியில் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கும்பலாக வங்கியில் நுழைந்து அங்கிருந்த அதிகாரி கஸ்தூரியை கயிறால் கட்டிப்போட்டு விட்டு சுமார் 400 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
மாலை 6 மணியான பிறகும் வங்கி மூடாமல் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் வங்கிக்குள் சென்றனர். அப்போது கஸ்தூரி கட்டப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி.மணிவண்ணன், ஏஎஸ்பி சர்வேஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். கொள்ளை நடந்தது குறித்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தினர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.