பீர்பலும், அக்பரும் ஒருநாள் ஆட்டுக் கிடங்குக்குச் சென்றிருந்தனர். அங்கு ஆடுகள் மந்தை மந்தையாக இருந்தன. ஆட்டிடையன் அவைகளுக்கு, தழைகளைப் போட்டுக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட அக்பர் பீர்பலைப் பார்த்து, ""பீர்பல், இந்த ஆடுகளுக்கு வழக்கமாகத் தரும் உணவைப்போல் இரண்டு மடங்கு தந்தால் இவற்றின் எடை இரு மடங்காகும் அல்லவா?'' என்றார்.
""அப்படியும் சொல்ல முடியாது! சில ஆடுகளுக்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் இருக்கிற எடைதான் இருக்கும்,'' என்றார் பீர்பல்.
""நீ சொல்வதை நம்பமுடியவில்லையே! எதற்கும் இந்தக் கிடங்கிலிருந்து ஓர் ஆட்டை எடுத்துப் போய், நாள்தோறும் வழக்கமாகத் தரும் தீனியைப் போல் இரண்டு மடங்கு தீனி கொடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு கொண்டு வா, பார்ப்போம். அப்போது நீ வளர்த்த ஆட்டின் எடை கூடியுள்ளதா, இல்லையா என்பதைப் பார்த்து விடுவோம்,'' என்றார் அக்பர்.
பீர்பலும், மாமன்னர் கூறியவாறே ஆட்டுக் கிடங்கிலிருந்து ஓர் ஆட்டை தம்முடன் அழைத்துச் சென்றார். நாள்தோறும் வேளை தவறாமல் அரண்மனையிலிருந்து ஒரு வேலையாள் வந்து ஆட்டுக்கு அரசர் கூறியவாறு இருமடங்கு தீனி வைத்து விட்டுப் போய்க் கொண்டிருந் தான். இவ்வாறு, அரண்மனை வேலையாள் தீனி வைத்து விட்டுப் போனதும், இரவு பூராவும் அந்த ஆட்டின் எதிரே ஒரு கசாப்புக் கடைக்காரனை வெட்டுக் கத்தியுடன் நிற்க வைத்தார் பீர்பல்.
பகல் பூராவும் எவ்வளவு தீனி கொடுத்தும் கூட இரவில் கசாப்புக்காரன் வெட்டுக் கத்தியுடன் எதிரே நிற்பதைப் பார்த்ததும் அதற்குத் தின்ற தீனியெல்லாம் உடம்பில் ஒட்டவில்லை.
ஒருமாதம் சென்ற பின், பீர்பல் வளர்த்த ஆட்டை நிறுத்துப் பார்த்த அக்பர் எடை ஒரு மாதத்திற்கு முன் இருந்த நிலையிலேயே இருந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டார்.
""ஒரு மாதமாக இவ்வளவு தீனி கொடுத்தும் இந்த ஆடு வளர்ச்சியடையாததற்கு காரணம் என்ன?'' என்று கேட்டார் மாமன்னர்.
பீர்பல் நடந்த கதையைக் கூறி, ""அரசே, மனிதர்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எவ்வளவுதான் சத்துள்ள உணவு வகைகளை ஊட்டி வளர்த்தாலும் மனதில் பயம் ஏற்பட்டு விட்டால், சாப்பிட்ட உணவு எதுவும் உடம்பில் ஒட்டாது. மனதில் பீதியுடன் சத்துள்ள உணவை அதிகமாகச் சாப்பிடுவதை விட, கலவரமும், பீதியும் இல்லாமல் குறைவாகச் சாப்பிட்டால் கூடப் போதும்,'' என்றார்.
பீர்பலின் கருத்தை ஏற்றுக் கொண்டார் அக்பர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.