பெங்களூரு மாநகரத்தில் பல ஆண்டுகளாகவே குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் , கொள்ளை, விபச்சாரத்தில் ஈடுபட வைப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த குற்றத்தில் இருந்து மிக எளிதாக குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இது போன்று நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கும் , அதன் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளினால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரக்கூட அச்சப்பட்டுகின்றனர். மேலும் கண்டிப்பாக நமக்கு நியாயம் கிடைக்காது என்ற மனப்பான்மையால் தங்களது பிரச்னைகளை மூடி மறைத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கை சீரழிந்து விடுகிறது. இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 1,360 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எந்தவித தண்டனையும் பெறாமல் தப்பித்து விடுகிறார்கள். மேலும் இந்த 1360 வழக்கில், 2 வழக்குகள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்துள்ளது. மேலும் 18 வழக்குகள் பொய் வழக்கு என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் குற்றவாளிகளுக்கு சிறிதும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. இதற்கு சட்டத்தை வலுவாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
இதுபோன்ற வழக்குகள் நீதி மன்றத்துக்கு சென்றாலும் அதன் விசாரணை சீக்கிரம் முடிவதில்லை. இது போன்ற காரணங்களினால் தான் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் நீதி மன்றத்தை விரும்புவதில்லை. கடந்த 2013-16 வரை மட்டும் 637 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 588 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மீதம் உள்ள வழக்குகள் இன்னும் விசாரணைக்கு கூட வரவில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இது போன்ற குற்றங்களை தவிர்ப்பதற்காக 2012ஆம் ஆண்டு போக்சோ என்ற சட்டத்தை கர்நாடக அரசு அமல் படுத்தியது. இதற்காக பெங்களூருவில் மட்டும் மூன்று நீதிமன்றமும், மற்ற மாவட்டத்திற்கு தலா ஒரு நீதிமன்றமும் கர்நாடக அரசு நிறுவி உள்ளது.
குற்றங்களை தவிர்க்கும் முறை: இதுபோன்ற குற்றங்கள் குறைய குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு பற்றிய அறிவுரையை வழங்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை கண்டிப்பு என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக தடை விதிக்கக்கூடாது. ஏனென்றால் அதுவே குழந்தைகளை தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். மேலும் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும்போது கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும் அவ்வாறு போகும்போது பெண் குழந்தைகள் அவர்களின் பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்வார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.