எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். மனதிற்கு நல்ல மகிழ்ச்சியுண்டாகும். நல்ல தேகபுஷ்டி உண்டாகும். நல்ல பலம் உண்டாகும். உடலில் நல்ல ஒளியுண்டாகும். வாலிபத் தன்மை என்றும் நிலைத்திருக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட நோய், செவி நோய், கபால அழல்நோய் காச நோய் மட்டுமன்றி உடல் புண்களும் குணமாகும்.
ஆண்களைப் பொறுத்தவரையில் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் செவ்வாயும் வெள்ளியும் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அதிகாலையில் எண்ணெய் தேய்த்து சூரிய உதயத்திற்கு முன்னால் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் உடனே குளிக்க கூடாது. குறைந்தது அரைமணி நேரமாவது பொறுத்துதான் குளிக்க வேண்டும்.
நல்லெண்ணெய் அவ்விதமே உபயோகிக்கக் கூடாது. காய்ச்சி ஆற வைத்துதான் குளிக்க வேண்டும். அதிலும் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். சோப் உபயோகிக்கக்கூடாது. சீயக்காய்த்தூள் அல்லது அரைப்பு தேய்த்துதான் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெயை இருதயத்தை நோக்கித் தேக்க வேண்டும். இவ்விதம் தேய்த்து வந்தால் தோல் நல்ல பளபளப்புடன் காணப்படும். உடற்சூடு கண்டிப்பாகத் தணியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.