வங்கியில் பணம் பெற்று மோசடி செய்ததாக மதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் ரெப்கோ வங்கி கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கி கிளையின் மற்றொரு அலுவலகம் வியாசர்பாடியில் உள்ளது. இதில், மதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வங்கி நிர்வாகிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வங்கி நிர்வாகி வெங்கடாச்சலம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த வங்கி நிர்வாகிகள் இதுகுறித்து எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாஜிஸ்திரேட் உரிய விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், ஜீவன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும், 3 பேர் மீதும் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.