Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

அனைவருக்கும் பொதுவான சில டிப்ஸ்


நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.


தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

முகம்  

* பாசிப் பயறு, ஆவாரம்பூ, ஆவாரம் இலை, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, சந்தனம், மகிழம்பூ, கிச்சிலிக் கிழங்கு போன்றவற்றைப் பொடியாக 

அரைத்துப் பன்னீரில் குழைத்து வாரம் ஒரு முறை முகத்திற்குப் போடவும். முகம் வடுக்கள், பருக்க ளின்றி பொலிவுடன் இருக் கும்.

கழுத்து

* கழுத்துப் பகுதி கருத்திருந்தால் கோதுமை மாவு, பால் பவுடர், பாசிப் பயறு மாவு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம். 

மார்பகங்கள்

* குளிக்கும்போது மார்பகங்களை மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். 


* இரவு படுக்கச் செல்லும்போது தளர் வான உடைகளை அணிந்து கொள்ளலாம்.


கைகள்

* கை நகங்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, பதினைந்து நாட் களுக்கொரு முறை வெந்நீரில் உப்பு, எலுமிச்சம்பழம், ஷாம்பூ கலந்து 

கைகளை ஊற வைத்து மெனிக்யூர் கருவிகளால் சுத்தப்படுத்தி, ஷேப் செய்ய வேண்டும். 

வயிறு, இடுப்பு 

* இடுப்பில் அதிக சதை இருந்தால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் சரியாக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு 

வயிற்றில் ஏற்படும் கோடுகளின்மேல் மஞ்சள், நல்லெண் ணெய் கலந்து தேய்க்கலாம். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் தடவினாலும் சரி யாகும்.


கால்கள், பாதம்

* பாத வெடிப்பிருந்தால் பதி னைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம். 

* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.