சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் மானியம் பெற ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டுவோர் அரசின் ‘கிவ் இட் அப்’ திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் தங்களுக்கு வேண்டாம் என்று விட்டுக் கொடுக்கலாம், ஆனால் மீண்டும் மானியம் பெற விரும்பினால் ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு மத்திய அமைச்சர் தெரிவிக்கும் போது, “ஒரு முறை வேண்டாம் என்றால் அவ்வளவுதான் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் விட்டுக் கொடுத்த மானியத்தைத் திரும்பப் பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என்றார்.
இது வரை 1.13 கோடி பேர் சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர், இதில் 50% மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
“எங்களால் வருமான வரித் தரவுகளை அணுக முடியவில்லை. எனவேதான் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேலாக ஆண்டு வருவாய் உடையோர் தாங்களாகவே மனமுவந்து மானியத் தொகையை விட்டுக் கொடுக்க முன் வருமாறு அரசு அழைப்பு விடுத்தது. இதன் படி 1 கோடிக்கும் மேலானோர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, மானியம் விட்டுக் கொடுப்பு திட்டத்தின் கீழ் கிடைத்த சேமிப்பினால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவில் 60 லட்சம் எல்.பி.ஜி. இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 5 கோடி எல்.பி.ஜி. இணைப்புகளுக்காக மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் படி முதலாம் ஆண்டில் 1.5 கோடி இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இந்தியா தனது 21 மில்லியன் டன் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 40% சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது புதிய இணைப்புகள் வழங்கும் திட்டத்தினால் இறக்குமதி அதிகரிக்கும் என்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.