ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் வசித்தன. அவை மழைக்காலத்தில் மகிழ்ச்சியாக அங்கு வாழ்ந்து வந்தன. கோடைக்காலம் வந்ததும் அந்தக் குளத்து நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் தொடங்கியது. அதனால் அந்தத் தவளைகள் கவலை அடைந்தன.
வேறிடத்திற்குச் செல்ல நினைத்த தவளைகள், அங்கிருந்து புறப்பட்டன. வழியில் நீர் நிறைந்த ஒரு கிணற்றைக் கண்டன. அதைக் கண்டதும் ஒரு தவளை மிகவும் மகிழ்ந்தது.
""நாம் இந்தக் கிணற்றில் இறங்கி, இங்கேயே குடியிருக்கலாம். நமக்குத் தேவையான உணவை இங்கிருந்தே தேடலாம்...!'' என்றது.
இதைக் கேட்ட மற்றொரு தவளை எச்சரிக்கையுடன் ஒரு வினாவை எழுப்பியது.
""நண்பரே! தற்சமயம் இந்தக் கிணற்றில் தண்ணீர் இருப்பது உண்மைதான்... ஆனால், கோடை வெப்பத்தால் இந்தத் தண்ணீரும் வற்றிவிட்டால், நாம் எப்படி தப்பிப்பது...? ஒருமுறை இந்தக் கிணற்றில் குதித்துவிட்டால், மீண்டும் இதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினமாக இருக்குமே...!'' என்றது.
""நீ சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கிறது...!'' என்று கூறியது இன்னொரு தவளை.
""நாம் நிம்மதியாக வாழ நிரந்தரமான ஓரிடத்தைத் தேடுவோம்!'' எனக் கூறி அவை அங்கிருந்து சென்றன.
எதிர்காலத்தில் வர இருப்பதை நிகழ்காலத்திலேயே சிந்திப்பவன் அறிவாளி!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.