விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் செல்லவிருக்கும் வெளிநாட்டில், எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.
உங்கள் பாஸ்போர்ட், குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து குடியேற்ற அனுமதி அதாவது, விசா தேவை.
உங்களுடைய ஒவ்வொரு, 'பேக்கேஜ்'களையும் உங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெட்டிகள் மாறினாலோ, காணாமல் போனாலோ திரும்ப கிடைக்க உதவும்.
ஒவ்வொரு விமான நிறுவனமும், வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பற்றி, அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதை பார்த்து, விமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தால் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில் பெயர், பயணத்தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கிறதா என, சரி பார்ப்பது நல்லது.
விசா உள்ள சரியான பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். துணை பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு முந்தைய அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
விமான பயணத்திற்கு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, 'விட்டமின் சி' உள்ள உணவுகளை சாப்பிடவும். வீட்டில் உள்ள கிருமிகளை விட, விமானத்தின் உள்ளே இருக்கும் காற்றில் அதிக கிருமிகள் இருக்கும்.
விமான பயணத்தின் போது, காலணிகளை கழற்றாதீர்கள். குறைந்த காற்றழுத்தம் காரணமாக, பாதங்கள் வீங்கிப் போகலாம்.
வெளியூர் செல்லும் போது, ப்ரிஜ்ஜை, 'சுவிட்ச் ஆப்' செய்து, அழுத்தமாக மூடாமல், இடைவெளி விட்டு கதவுக்கும், ப்ரிட்ஜுக்கும் இடையே, சிறிய கட்டையோ அல்லது காகிதத்தை பந்து போல உருட்டியோ வைக்கலாம். காற்றோட்டம் கிடைக்கும்.
பாத்திரங்களை கழுவி, உலர்த்தி, சுத்தமான துணி மீது கவிழ்த்து வைத்து, இன்னொரு துணியை போட்டு மூடிவிட்டால், பாத்திரங்களுக்குள் பூச்சி எதுவும் போகாமல் இருக்கும்.
வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைகளின் கால அளவு, டூர் முடிந்து திரும்பி வருவதற்குள் முடிவடைகிறதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள்; இல்லாவிடில், முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
காஸ் ஸ்டவ்வின், ரெகுலேட்டரை கழற்றி, சிலிண்டரின் வாயை மூடி, காற்றோட்டமான இடத்தில் வைத்து விடவும்.
டூர் டிப்ஸ்!
டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' மற்றும் சமையலறை மின்சாதன பொருட்கள் போன்றவற்றை, 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும். மின் சாதனங்களில் தொடர்ந்து தூசி படிந்தால், அதில் போடப்பட்டிருக்கும் ஆயிலில் தூசிகள் சேர்ந்து, உலர்ந்து கட்டியாகி விடும். இதனால். உள்ளேயிருக்கும் இயந்திரம் பழுதாக வாய்ப்புள்ளது.
சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத ஊர்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், பேருந்து திரும்பி வரும் நேரத்தை முன்னதாகவே கேட்டு வைத்துக் கொண்டால், அதற்கேற்ப சுவாமி தரிசனத்தை முடித்து, சவுகரியமாக திரும்பலாம்.
மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது, காது அடைப்பது மற்றும் குத்துவலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதை தவிர்க்க, மலையேறும் சமயத்தில், வாயில் ஒரு சாக்லெட்டைப் போட்டு சுவைத்தால், அது போன்ற உணர்வு ஏற்படாது.
'ஏசி'யில், மின் இணைப்பை நீக்கி, அதில் உள்ள விண்டோவை மூடி, அதன் மேலே துணி போட்டு மூடவும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.