Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

ஜூஸ் கசப்பாக இருந்ததால் கழுத்து நெரித்து பெண் கொலை


பெங்களூரு எப்பிகிரே ,எச்.எஸ்.ஆர் பகுதியில் ஜீஸ் கடை நடத்தி வருபவர் சுமித்திரா இவர் தனது கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவரது நெருங்கிய  உறவினரான அசோக்குமார் அவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சுமித்திரா கணவரை இழந்த பின்பு இவருடைய பாதுகாப்பில் தான் இருந்து வருகிறார்.மேலும் இவரது ஜூஸ் கடைக்கு அருகில் ஒரு தனியார் மருந்துகடை உள்ளது. இந்த மருந்து கடையின்  உரிமையாளர் ராமலிங்கா கவுடா ஆவார் . இவருக்கும் சுமித்திராவிற்கும் நீண்ட நாட்களாகவே தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ராமலிங்கா கவுடா சுமித்திரா வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் குடிக்க ஜீஸ் கேட்டுள்ளார். உடனே சுமித்திரா ஜூஸ் கொடுத்துள்ளார். ஜூஸ் குடித்த ராமலிங்கா கசப்பதாக கூறி சுமித்திராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் வாக்கு வாதம் சண்டையாக மாறியது . இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கா வீட்டில் இருந்த கையிறால் சுமித்திராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிவிட்டார்.  இந்த கொலை கள்ளத்தொடர்பு காரணத்தால் நடந்திருக்குமோ என சந்தேகத்துடன் , தப்பி ஓடிய ராமலிங்கா கவுடாவை  தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.