Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

வெளிநாட்டுக்கு தப்பி ஓடி 2 வருஷமாச்சு : மற்றொரு மல்லையா ரூ.6,800 கோடி கடன் பாக்கி


வங்கிகளில் ரூ.9,000 கோடி தராமல் இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா. இவரைப்போல் மற்றொரு மல்லையா வங்கிகளிடம் ரூ.6,800 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். அவர் வின்சம் குழும அதிபர் ஜாட்டின் மேத்தா. கிங்பிஷர் விமான நிறுவன அதிபர் விஜய் மல்லையா, 17 வங்கிகளிடம் வாங்கிய கடன்  ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி பாக்கி வைத்துள்ளார். இந்த வழக்கில் மல்லையா தொடர்ந்து ஆஜராகாததால் அமலாக்கத்துறை பரிந்துரைப்படி அவரது பாஸ்போர்ட்–் முடக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மல்லையாவுக்கு அடுத்ததாக அதிக அளவு கடன் பாக்கி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள வின்சம் குழுமம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் முக்கிய பிசினஸ் தங்கம், வைர வியாபாரம்.  இந்த நிறுவனத்துக்கு வெறும் உறுதிமொழி அடிப்படையில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச கோல்ட் வங்கிகள் வின்சம் குழுமத்துக்கு தங்கம் சப்ளை செய்கின்றன. இதற்கு பணம் வழங்குவதற்கு உள்நாட்டு வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இந்த நிறுவனம் கடந்த 2013 மார்ச் மாதத்திலேயே கடன் பாக்கி பட்டியலில் சேர்ந்து விட்டது. இதன்பிறகு கடன் நிலுவைக்கு தீர்வுகாண மேலும் 23 லட்சம் கேட்டுள்ளது வின்சம் குழுமம். ஆனால் வங்கிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடன் பாக்கி வைத்திருந்த வின்சன் குழுமம், பின்னர் 1,50,000 டாலர் (சுமார் ரூ.99,80,000 கோடி) செலுத்தியுள்ளது.
கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு, பாஸ்போர்ட் முடக்கம், கைது வாரண்ட், நாடு கடத்த கோரிக்கை என அடுத்தடுத்து நெருக்கடி முற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில், சொற்ப கடனாவது செலுத்தியதால் இந்த அளவு நெருக்கடி வர வாய்ப்பில்லை என்கின்றன வின்சம் குழும வட்டாரங்கள்.

ஆனால், இன்னமும் இந்த நிறுவனம் தரவேண்டிய தொகை ரூ.6,800 கோடி. மல்லையாவுக்கு அடுத்ததாக மிகப்பெரிய கடன்பாக்கி இதுதான். அதோடு இதன் உரிமையாளர் ஜாட்டின் மேத்தா வெளிநாடு போய் 2 ஆண்டு ஆகிறது. ‘‘வெளிநாடுகளில் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். அவர்கள் தங்கம் போன்றவற்றுக்கு தரவேண்டிய தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. இதனால்தான் இவ்வளவு பாக்கி வந்துவிட்டது’’ என்று கைவிரிக்கிறது வின்சம் குழுமம். மேத்தா 14 வங்கிகளில் இந்த கடன் தொகையை வாங்கியுள்ளார். இதில் ஸ்டாண்டர்டு சாட்டர்ட், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தரவேண்டிய பாக்கி மட்டும் ரூ.1,800 கோடி. கடனுக்கு அடமானமும் இல்லை. ஆளும் இங்கில்லை. வலை விரித்தால் சிக்குவாரா என்பது புதிர்தான்.

மல்லையாவை நாடு கடத்த சட்ட ஆலோசனை:

கடன் மோசடி செய்து இங்கிலாந்தில் பதுங்கியுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் முடக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறினார். இந்தியாவுக்கு மல்லையாவை கொண்டுவந்து சட்டத்தின்முன்பு நிறுத்த மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.